உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் - 31

கு ஞ் சுமந்த மாதரையும் அகல் விளக்கேந்திய மாதரையும் வருவித்து நிறுத்தி மணமக்கள் அவரை வழிபடுமாறு செய்தது போலவே, சிலப்பதிகார காலத்துத் தமிழரும் அவ்விரண்டுந் தாங்கிய மாதரைத் திருமணப் பந்தரில் வருவித்து நிறுத்தினமை,

66

'விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை முளைக்குட நிரையினர்"

என அந்நூல் புகலுமாற்றாற் புலனாம். இன்னும் மகளிர் நால்வர்கூடி மணமக்களை வாழ்த்தவும், அதன்பின் அவர் தந் தமர்போந்து மணமக்களைப் புணர்த்தவும் பண்டைத் தமிழர்தந் திருமணம் நடைபெற்றவாறு போலவே, சிலப்பதிகார காலத்துத் தமிழர்தந் திருமணமும் நடைபெற்றமை,

“போதொடு விரிகூந்தற் பொலன்நறுங் கொடியன்னார்

காதலற் பிரியாமற் கவவுக்கை ஞெகிழாமற்

றீதறு கெனஏத்திச் சின்மலர் கொடுதூவி அங்கண் உலகில் அருந்ததி யன்னாளை மங்கல நல்லமளி ஏற்றினார்”

என அந்நூல் கிளக்குமாற்றால் தெளியப்படும். எனவே, பண்டைத் தமிழர்தந் திருமணச் சடங்கிற் பெரும் பகுதி, சிலப்பதிகார காலத்தும் அதற்குப்பின் இற்றைநாள் வரையும் பார்ப்பனரே ஆசிரியரா யிருந்து நடத்துந் திருமணச் சடங்கிலும் புகுந்து அதற்குச் சிறப்பளித்துவருதல் ஐயுறவின்றித் துணியப் படுமென்க.

அங்ஙனமாயிற், றமிழரது திருமணச் சடங்கிற் பார்ப் பனராற் புதிது புகுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் யாவையோ வெனிற், கூறுதும்:

ருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தில் திருமணச் சடங் கினை நுவலும் 85ஆம் பதிகத்தில், முத்தீ வேள்வி வேட்டு அதன் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டதாக ஏதொரு குறிப்புங் காணப்படவில்லை; அங்கே நுவலப்படுவ தெல்லாம் மணமகளுக்கு முன்னமே மூன்று கணவர் உளரென்றும், அம்மூவருள் முதற்கணவன் சோமன் என்றும், பின்னர் அச்சோமன் அவளைக் கந்தருவர்க்குக் கொடுக்க அவர் அவட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/265&oldid=1592999" இலிருந்து மீள்விக்கப்பட்டது