உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

241

இரண்டாங் கணவராயின ரென்றும், அதன் பின்னர்த் தீக்கடவுள் அவட்கு மூன்றாங் கணவன் ஆயினனென்றும், அதன்பின் மக்கட் பிறவி யினளான ஒருமாதின் வயிற்றிற் பிறந்த ஓர் ஆடவன் அவட்கு நான்காங் கணவனாயின் னென்றுங் கூறுங் குற்றமான குறிப்புகளே யாம். மக்கள் வயிற்றிற் பிறந்த ஒரு பெண்மகளுக்குத் தேவர்கள் தந்தையர் ஆவரேயல்லாற், கணவர் ஆகார். அவ்வாறிருக்கப், பார்ப்பனர் அத்தேவர்களை யெல்லாம் அவட்குக் கணவராகக் கூறுவது அவடன் கற்புக்கு இழுக்காமன்றோ, ஆனால், ஆரிய நடையைத் தழீ ய பார்ப்பனர்க்கு அவர்தம் மகளிரின் கற்பைப் பற்றிய கவலை சிறிதுமேயில்லை யென்பது முன்னமே காட்டப் பட்டது. மற்றுத், தமிழ்மக்கட்கோ தம் மகளிரின் கற் பொழுக்கத்திற் கண்ணுங்கருத்தும் மிகுதியாயிருந்தன. தமிழ்க்குலமகளிர் தாங் காதலித்த கணவனையன்றித் தெய்வத்தையுந் தொழார்; ஆடவர் பிறரைத் தங்கனவிலுங் கருதார், இஃது உணர்ந்தன்றே தெய்வத் திருவள்ளுவர்,

“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

(குறள் 55)

என அருளிச் செய்தார். ஆகவே, பண்டைத் தமிழர்தந் திருமணச் சடங்கைப் பார்த்து, தமக்குள்ளும் அதனை யொப்பதாகத் திருமணம் நடத்தப் புகுந்த திராவிட ஆரியப் பார்ப்பனர் முத்தீ வேளாமலே, தமர் முன்னிலையில் மணமகன் தன் மணமகள் கையைப் பிடித்துக் கொண்டு தேவர்களை வேண்டி அவளைத் தனக்குரியளாகச் செய்து கொண்ட அவ்வளவே இருக்குவேதப் பதிகத்திற் சொல்லப் பட்டிருத்தல் நினைவுகூரற் பாற்று. இதுகொண்டு, இருக்கு வேத இறுதிக் காலத்தில் திராவிட ஆரியர்க்குள் நடத்தப் பட்ட திருமணச் சடங்கில் முத்தீ வேள்வி வேட்கப் படவில்லை யென்பது திண்ணமாய்ப் பெறப்படுதல் காண்க.

இனி அதர்வவேதப் பதினான்காம் மண்டிலத்திற் போந்த முதற் பதிகத்திலோ வேள்வி வேட்டுத் திருமணம் நடத்தப் பட்டமையும், அவ்வேள்வித் தீயைச் சூழ மணமகள் வலம் வந்தமையும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இதனால், இருக்குவேத இறுதிக் காலத்தில் நிகழாத வேள்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/266&oldid=1593000" இலிருந்து மீள்விக்கப்பட்டது