உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் - 31

யை, அதர்வவேத காலத்திற் பார்ப்பனர் புதிதாக வகுத்துத் திருமணம் நடத்தலானமை தெற்றென விளங்கா நிற்கும்.

இன்னும், இருக்குவேதப் பதிகத்திற் கூறப்படாத அம்மி மிதிக்கும் நிகழ்ச்சி, அதர்வவேதப் பதிகத்திற் கூறப்பட்டிருக் கின்றது. அங்ஙனம் மணமகள் அம்மி மிதித்த பிறகே மணமகன் அவளது கையைப் பற்றிக் கொண்டு தேவர்களுக்கு வேண்டுகோளுரை மொழிந்தன னென்றும் அதர்வ வேதப் பதிகம் நுவல்கின்றது. இது கொண்டு, மணமகள் அம்மி மிதிக்கும் நிகழ்ச்சியானது, அதர்வேத காலத்துப் பார்ப்பனர் களாற் றிருமணச் ச் சடங்கிற் புதிது புகுத்தப்பட்டமை தெளியப்படும். ஆயினும், அது சிலப்பதிகாரத்திற் சொல்லப்பட வில்லை.

இனி, அம்மி மிதித்தபின் அருந்ததி என்னும் வான் மீனை மணமகன் தன் மணமகளுக்குக் காட்டுஞ் சடங்கு பார்ப்பனர் நடத்துந் திருமணத்தில் இப்போது புதிது புகுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அருந்ததி காட்டுஞ் சடங்கு இருக்கு வேதத்திலாதல் அதர்வ வேதத்திலாதல் சிலப்பதி காரத்திலாதல் குறிக்கப் படாமை யால், அது முற்காலத்தில் நடந்த திருமணத்திற் சேர்ந்த தன்றென்றுஞ், சிலப்பதிகார காலத்தும் அது நடைபெற வில்லை யென்றுந், தேர்ந்தறிதல் வேண்டும். வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அம்மை பாடிய ஆறாந்திருமொழியின் முதற்பத்துச் செய்யுளும் அவ்வம்மை யார் தமக்குங் கண்ணனுக்குந் திருமணம் நடந்ததாகக் கனாக்கண்டு, அத்திருமணம் நடந்த முறைகளை அடைவே கூறும் வகையிற் பாடப்பட்டிருக்கின்றன. அவர் கூறிய திருமணச் சடங்குகளில் தீ வலம் வருதல், அம்மி மிதித்தல் முதலியன சொல்லப்பட்டிருப் பினும், அருந்ததி காட்டுஞ் சடங்கு குறிப்பாலாயினுஞ் சொல்லப்படவே யில்லை. ஆகவே, இற்றைக்குத் தொள்ளாயிர ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆண்டாளம் மையார் காலத்தும் அருந்ததி காட்டும் நிகழ்ச்சி நடைபெற வில்லை யென்பது தெற்றென உணரப்படும்.

மேலே ஆராய்ந்து காட்டியபடி, முத்தீ வேள்வியைத்

காட்டல்

முதலிய

தவிர, அம்மி மிதித்தல் அருந்ததி சடங்களெல்லாம் பார்ப்பனர்களாற் காலங்கடோறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/267&oldid=1593001" இலிருந்து மீள்விக்கப்பட்டது