உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

243

புதியவாய்ப் புகுத்தப்பட்டவைகளே யாதலாலுங், காதலாற் கற்பொழுக்கத்தில் நிலைபெற்ற நந் தமிழ் மாதரார்க்கு கல்லைப் போற் கற்பொழுக்கத்திற் றிண்ணியையாய் இருவென்றும், அருந்ததி யென்னும் ஆரியமாதைப் போற் கற்பொழுக்கத்திற் சிறந்து திகழ் என்றுங் கற்பித்தல் மீன் குஞ்சுக்கு நீச்சுக் கற்பித்தல்போல் மிகைப்பட்ட செய்கை யாய்த் தமிழ் மாதரை இழிவுபடுத்தும் நீரதாய் இருத்தலின், அவையிரண்டுந் தமிழர்தந் திருமணச் சடங்குகளிற் சேரா வண்ணம் அவையிற்றை அறவே விலக்கிவிடல் வேண்டும்.

றீக்க வு

தாழ்த்துதற்

இன்னும், முனிவர்களிற் சிறந்தவர் வசிட்டரென்று ங் கற்புடைமாதரிற் சிறந்தவள் அவர்தம் மனைவி அருந்ததி யென்றுங் கதை கட்டிவிட்டவர்கள் பார்ப்பனரே யாவர். தமிழர்களையுந் தமிழ்மாதரையுந் தமிழ்த் தெய்வமாகிய சிவபிரானையுந் பாருட்டே இக்கதை அவர்களாற் கட்டிவிடப்பட்டது.யாங்ஙனமெனிற், காட்டுதும், வடக்கிருந்து வந்த ஆரியர்க்குக் குரு வசிட்டரே யாவர். அவர் இவ்விந்திய நாட்டுள் வருதற்கு முன்னே தொட்டு, இங்கிருந்த தமிழர்களிற் சிறந்த குடியினரான பரதர்கட்குக் குரு விசுவாமித்திரரே யாவர். பரதவகுப்பினரிற் சேர்ந்த வியாச் முனிவரால் இருக்குவேதப் பாட்டுகள் ஒருங்கு கோத்து ஒழுங்குபடுத்தப்பட்டஞான்று, அவர் விசுவாமித் திரராற் ண்மேலும் பகலவன்மேலும் உருத்திரன் மேலும் இயற்றப்பட்ட பாக்களுக்கு முதன்மைதந்து, வசிட்டராலும் அவர்தம் இனத்தவராலும் இந்திரன் வருணன் முதலான சிறுதெய்வங்கண்மேற் பாடப்பட்ட பாக்களுக்குப் பாட்டின் மிகுதி பற்றியதொரு பெருமைதந்து அவ்விருக்கு வேதத்தை ஒரு முறைப்படுத்தினார். தமிழ்முனி வரான வியாசர் நடுநிலை வழாதுநின்று, பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளான உருத்திரர்க்கும் அவரது பேரொளி விளக்கமான தழற் பிழம்புக்கும் பகலவற்கும் முதன்மை தந்தது கண்டு மனம் பொறாத வசிட்டரும் அவரைக் குருவாய்க் கருதிய பார்ப்பனரும் விசுவாமித்திரர் பாடிய இருக்குவேதப் பதிகங்களைத் தம்மவருள் எவரும் ஓதுதல் ஆகாதென ஒரு பொருந்தாக் கட்டுப்பாடு வைத்துக் கொண்டிருப்பதுடன், தமிழர்களைச் சூத்திரர்களென இழித்துப் பேசி, அச்சூத்திரர்க்குரிய தெய்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/268&oldid=1593002" இலிருந்து மீள்விக்கப்பட்டது