உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

  • மறைமலையம் – 31

உருத்திரனே யாவனென்றும், உருத்திரன் பார்ப்பனர்களால் வணங்கத் தக்கான் அல்லனென்றுங் கரைந்து, பார்ப்பனர் களால் வணங்கப்படுதற் குரியான் நாராயணனேயென வற்புறுத்தி, அந்நாராயணன்றன் பிறவிகளான இராமனையுங் கண்ணனையுமே இன்றுகாறும் வழிபட்டு வருகின்றார்கள். இதன் விரிவை எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலிற் காண்க.

அதுமட்டுமா, அவ் வசிட்ட முனிவரின் மனைவி அருந்ததியைச், சிவபெருமானைப் பார்க்கிலும், அச்சிவ பெருமான்றன் புதல்வரான முருகப்பிரானைப் பார்க்கிலும் உயர்ந்தவ ளாக்குதற்குச் சூழ்ச்சி செய்து, சிவபெருமான் முருகக் கடவுளைத் தோற்றுவித்தல் வேண்டி வெளிப் படுத்திய விந்துவொளியை, அருந்ததியொழிந்த மற்றை முனிவரின் மனைவியரே ஏற்றுக் கருக்கொண்டு, அறுமுகக் கடவுளை ஈன்றனரென்றும் அப்பார்ப்பனர் ஒருபொய்க் கதை கட்டிவிட்டார். இக்கதை பொய்யே யாயினு இதனாற் போதரும் உண்மை யாதோவெனின்; வசிட்டரும் அவரைச் சேர்ந்தவர்களுஞ், சிவபிரானுக்கும் அவர்க்குப் புதல்வரான முருகக்கடவுளுக்கு மாறானவரென்பதூஉம், வசிட்ட ரொழிந்த மற்றை முனிவர்கள் அறுவரும் அவரைச் சேர்ந்தவர்களுஞ், சிவபிரானிடத்தும் முருகவேளிடத்தும் மெய்யன்புடையவர்க ளென்பதூ உமேயாம் என்க. எனவே, தமிழ்மக்கட்கும் அவர் தந் தெய்வத்திற்கும் பெரும் பகைவர்களான வசிட்டரும் அவர் தம் ஆரிய இனத்தாரும் அவர்தம் மகளிருமே, தமிழர்க்குத் திருமணச் சடங்கினையுந், தமிழ் மகளிர்க்குக் கற்பொழுக்கத் தினையுங் கற்பித்துக் கொடுத்தவர் என, அவ்வெண்ணத்தைத் தமிழ்மக்க ளுள்ளத்திற் பைய நுழைத்து விடற் பொருட்டே, அருந்ததி காட்டுஞ் சடங்கினை இஞ்ஞான்றைப் பார்ப்பனர் தமிழர் தந் திருமணச் சடங்குகளில் நுழைத்து விடலாயினா ரென்று தெரிந்து கொள்க. காதன்மணமுங் கற்பொழுக்கமும் இன்ன வென்றே அறியாத ஆரியமாதர், காதற் கற்பொழுக்கத் தையே தமக்குயிராய்க்கொண்ட தமிழ் நங்கை மார்க்கு அவ்விரண்டையும் கற்றுக்கொடுத்தாரெனக் கட்டி யுரைப்பது, கட்குடியன் ஒருவன் கட்குடியே அறியாத மேன்மகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/269&oldid=1593003" இலிருந்து மீள்விக்கப்பட்டது