உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

  • மறைமலையம் - 31

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

1940இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடிய அனைத்திந்தியத் தமிழர் மதமாநாட்டுக்குத் தலைமையேற்ற அடிகள், அத்தலைமைப் பொழிவுக்கு எழுதியதும், பொழிவாற்றியது மாகியவையே தமிழர் மதம் என்னும் நூலாகும். தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களில் இருந்தும் இருக்கு

வேதம் முதலிய வடநூல்களில் இருந்தும் ஆங்கில நூல்களில் இருந்தும் காணப்பெறும் அரிய கருத்து களைக் கொண்டது இந்நூல்.

தமிழர்களின் ஒளி வழிபாடும் தீப்பிழம்பில் இருந்து சிவமும், நீரின் நீல நிறத்தில் இருந்து அம்மையும் காணப்பட்டமையும், அம்மையையே திருமாலாகக் கண்டவர் என்பதையும் விளக்குகிறார். மேலும் காலைக் கதிர் முருகன் எனவும் மாலைக் கதிர் சிவன் எனவும் வழிபடப்பட்டமையையும் குறிப்பிடுகிறார்.

எரியோம்பல் தமிழர்க்கு உண்மையையும், அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் என்னும் சடங்கு ஒழிந்த மற்றைய திருமணச் சடங்குகள் தமிழர்க்குப் பண்டே உண்டு என்றும் காட்டுகிறார். ஊழ்வினைக் கொள்கையும் தமிழர்க்கு உண்டு என்று உறுதிப் படுத்துகிறார். இது 1941 இல் வெளிவந்தது. ல்

இரா. இளங்குமரனார் இந்திய இலக்கியச் சிற்பிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/27&oldid=1592741" இலிருந்து மீள்விக்கப்பட்டது