உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

முகவுரை

சென்னை மாநகரில் அனைத்திந்திய தமிழர் மத மாநாடு கூட்டுதற்கு முனைந்த அதன் அமைச்சர், யாமே அதற்கு அவைத் தலைவராய் அமர்ந்து அதனை நடத்துதல் வேண்டுமென எம்மை வற்புறுத்து வேண்டிக்கொண்ட துடன், அதனை நடத்தும் எமதுழைப்பிற்காக இருநூறு ரூபாயும் எமக்கு நன்கொடையாக அன்புடன் விடுத் துதவினர். அதனை ஏற்று, அவரது வேண்டுகோளுக்கும் இணங்கி அதனை நடத்த ஒப்புக் கொண்டேம்.

ன்

பின்னர்ச் சிலநாளில், அம்மாநாட்டில் யாம் நிகழ்த்துந் தலைமையுரையினை முழுதும் எழுதி அச்சிட்டு வெளி யிட்டால், தமிழ்மக்கட்கும் பிறர்க்கும் அது பெரிது பயன்படும் எனத் தெரிவித்து, அதனை எழுதுமாறு வற்புறுத்தி அவர் எம்மை மிகவும் வேண்டினர். அதன்மேல், அதனை எழுதுதற்கு இசைந்து, எழுதிமுடித்தபின் அதனை அச்சிடுஞ் செலவுக்கு என் சய்வதென்று அவரை வினாவினேம். அதற்கவர், அச்சுச் சலவைத் தாமே கொடுப்பதாகவும், அச்செலவுத் தொகையை

அச்சிட்டபின் புத்தகப் படிகளாகத் தாம் பெற்றுக்

கொள்வதாகவுங் கூறினர். அவரது சொல்லை நம்பி, எம்முடைய நூல்களில் அரைகுறையாய் அச்சிட்டு முடிக்கப்படாமலிருக்கும் நூல்களின் வேலையையும் நிறுத்திவைத்துத், தமிழர்மதம் என்னும் இந்நூலை விரைந் தெழுதி முடிக்கும் முயற்சியிலேயே இறங்கி விட்டேம். இறங்கி இதனைப் பாதிக்குமேல் எழுதி விட்டபின், இந்நூலை அச்சிடுஞ் செலவுக்கு வேண்டுந்தொகை திரட்டமுடியா மையால், இதன் அச்சுச்செலவுத் தொகையைத் தாம் தரல் இயலாதென்று அமைச்சர் தெரிவித்துவிட்டார்.

இதனால் முதலில் எமதுள்ளஞ் சிறிது கலங்கினாலும், இதுகாறும் எம்முடைய தமிழ்த்தொண்டு சிவத்தொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/28&oldid=1592742" இலிருந்து மீள்விக்கப்பட்டது