உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

-

மறைமலையம் - 31

களுக்குப் பொருளுதவி செய்துவரும் எல்லாம்வல்ல சிவ பெருமான் இதற்கும் உதவி செய்து எப்படியும் இதனை வெளியிடுவிப்பான் என்னும் எண்ணம் எமதுள்ளத்தில் முனைந் தெழவே, இதனை எங்ஙனமாயினும் எழுதிமுடித்து அச்சிட்டு வெளிப்படுத்தல் வேண்டுமென உறுதிகொண்டு, திருவள்ளுவர் ஆண்டு1969, சித்திரைத் திங்கள், 24 ஆம் நாள் எழுதத் துவங்கிய இந்நூலைத், திருவள்ளுவர் ஆண்டு 1970, ஆனித் திங்கள் 29ஆம் நாள் எழுதி முடித்தேம்.

ஆகவே, இதனை எழுதிமுடிப்பதற்கு ஓராண்டும் இரண்டு திங்களும் இரண்டு நாளும் ஆயின. இந்நூலை எழுதி வெளியிடுதற்கு எமக்குண்டான வாழ்க்கைச் செலவு ரூ. 1500 ஆகும்; இந்நூலின் அச்சுச் செலவு, காகிதச்செலவு, கட்டிடச் செலவெல்லாம் ரூ.750 ஆகும்; ஆக இந்நூற் செலவு மொத்தம் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ரூபாயாகும். இந்த ரூ.2250உம் முன்பணமாகச் செலவழித்தால் அல்லாமல் இந்நூல் வெளி வருதற்கு வேறு வழியில்லை. இப்பெருந் தாகையை முன்னதாகச் செலவழித்தலால் முதலும் வட்டியுங் கரைந்து விடுகின்றன; பிறகு இத்தொகையைக் காண்டலும் இயலாது. இந்நூலின் ஆயிரம்படிகளில் தொளா யிரம்படிகளே விற்பனையாகும்; எஞ்சிய நூறும் பலவழிகளில் வீண் செலவாய்ப்போம்; இத்தொளாயிரம் படிகளும் விற்கச் சிறிதேறக் குறையப் பன்னிரண்டு ஆண்டுகளாகும். இதன் படிகளை அவ்வப்போது விற்றெடுக்குஞ் தொகைகளோ உடனுக்குடன் செலவாய்ப்போதலால், தற்கென்று முன்பணமாகச் செலவழித்த தொகையையும் வட்டியையுந் திரும்பப் பெறுதலும் இயலாது.

சிறு

சிறு

இங்ஙனமே, எம்முடைய நூல்களை வெளியிடுதற்குச் செலவழித்த தொகை சிறிதேறக்குறைய ஐம்பதினாயிர ரூபாயாகும். இத்தொகை முழுமையாய்க் கையில் இப்போதி ருந்தால், எமக்குத் திங்கடோறும் இருநூறு ரூபாய்க்குக் குறை யாமல் வருமானம் கிடைக்கும். ஆனால், தமிழுலகம் அதனால் யாது பயன்பெறும்? அதனை நினைந்தே எமக் குண்டாம் பெரும் பொருட் செலவையும் பேருழைப்பையும் ஒரு சிறிதுங் கருதாமல் எமது தொண்டினை நாற்பத்தைந் தாண்டுகளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/29&oldid=1592743" இலிருந்து மீள்விக்கப்பட்டது