உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

5

ஒன்றேகொண்டு

மேலாகச் சிவபிரான் றிருவருளுதவி எம்மாலியன்ற மட்டுந் தனித்தமிழில் தொடர்பாக நடத்தி வருகின்றோம்.

இந்நூல், தமிழையுந் தமிழர்தம் மதத்தையும் பற்றி யாம் நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்த ஆராய்ச்சி யின் முடிபுகளை மிகச்சுருங்காமலும் மிக விரியாமலும் நன்கு விளக்க வேண்டு மளவுக்கு விளக்கிச் செல்வதாகும். இதன்கட் காணப்படும் பொருள்களிற் பெரும்பாலான பலர்க்குப் புதுமையாக காணப்படலாம். அதற்குக் காரணம், நந்தமிழ் மக்களிற் பெரும்பாலார் கல்வியறிவு வாயாதவர்களாயுங், கல்வியறிவு வாய்த்த சிறுபாலாரும் பழந்தமிழ் நூல்களை ஆராய்ச்சிக் கண்கொண்டு ஆழ்ந்து நுணுகிப் பாராதவராய் வடநூற் நூற் பொய்வழக்குகளைத் தழீஇப் பொய்க் கொள்கை களில் மனம் அழுந்தப் பதிந்தவராயும் இருப்பதேயாகும்.

தமிழ்ப்பழமக்களின் கொள்கைகளில் யாம் எடுத்து விளக்குதற்குப் புகுந்த ஒவ்வொன்றிற்குந், தொல்காப்பியம் முதலான மிகப் பழைய தமிழ்நூல்களிலிருந்தும், அங்ஙனமே மிகப்பழைய இருக்குவேதம் முதலான வடநூல்களிலிருந்தும், பண்டைத் தமிழர்தங் கொள்கைகளின் உண்மையை உரம்பெற நாட்டும் இஞ்ஞான்றை ஆங்கில அரும்பெறல் நூல்களிலிருந்தும் வலிய சான்றுகள் எடுத்துக் காட்டியிருக் கின்றே மாதலால், யாம் இதன்கண் விளக்கியிருக்கும் பொருள்கள் அத்தனையும் மிகப்பழைய உண்மைப் பொருள் களேயல்லால், முன் இல்லாது புதியவாய் முளைத்த பொருள்கள் அல்லவென் றுணர்தல் வேண்டும். பிறவியிலேயே கண் குருடாகிப் பகலவன் ஒளியைக் காணாத ஒருவன், கதுமென இறைவனருளாற் குருடு நீங்கிப் பகலவனது பேரொளி விளக்கத்தைக் கண்டு புதிய இக்காட்சி மெய்யோ பொய்யோ வெனக்கருதி மருளுமாப் போலவே பழந்தமிழ்ச் சான்றோரின் மெய்க் கொள்கைகளாகிய பெருஞ்சுடரொளி விளக்கத்தைக் காணமாட்டாமல் அகக்கண் குருடுபட்ட இஞ்ஞான்றைத் தமிழர் பெரும்பாலார், இந் நூலால் அக்குருடு நீங்கி அம்மாப்பெருங் காட்சியைக் காணுங்கால் இது மெய்யோ பொய்யோ என மருளுதல் இயல்பன்றோ? ஆயினும், அவர் இந்நூலை ஒருகாலன்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/30&oldid=1592745" இலிருந்து மீள்விக்கப்பட்டது