உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மறைமலையம் - 31

பலகாலும் உற்றுநோக்கிப் பயில்வா ராயின், அம்மருட்சி நீங்கி ஈறில்இன்பம் எய்துவரென்பது திண்ணம். அது நிற்க.

நாள்

சென்ற ஆண்டு ஐப்பசித் திங்கள், 4 -ஆம் நாள் 5-ஆம் சென்னை மாநகரிற் பச்சையப்பன் கல்லூரியில் அனைத்திந்திய தமிழர் மத மாநாடு கூடிற்று. பெருந்திரளான அன்பர்கள் கல்லூரியின் மேன்மண்டபத்திலும் அதன் கீழும் நிறைந்திருந்தனர். யாம்முன்னமே ஒப்புக்கொண்டபடி, தக்கார் பலர்வேண்ட அம்மாநாட்டின் பேரவைக்குத் தலைவராய் அமர்ந்து, ‘தமிழர் மதம்' என்னும் இத்தலைமை யுரையின் முதற்பகுதியை முதலிற் படிக்கச்செய்தேம். அம்முதற்பகுதி முடிந்ததும், அவையிலுள்ளார் பலருங் கடவுளைப்பற்றிய தமிழரின் கொள்கையைச் சொற்பொழி வாகவே நிகழ்த்துதல் வேண்டும் என எம்மைப் பெரிதும் வேண்டினர். அதற்கிசைந்து தமிழரின் கடவுட் கொள்கை இன்னதென்பதை ஒன்றரை மணிநேரம் வரையில் எம் மாலியன்ற மட்டும் நன்கினி து விளக்கிப் பேசினேம். அவையிலிருந்தார் அனைவரும் அதனைக் கருத்தொருங்கி அமைதியுடன் கேட்டு ‘இத்தகைய அரிய சொற்பொழிவு அமெரிக்கா முதலான அறிஞர் நிறைந்த இடங்களிற் செய்யப்பட்டிருக்குமானால் இதன்மேன்மை உலகம் முழுவதுங் கொண்டாடப்பட்டிருக்கும், என வியந்து பாராட்டி மகிழ்ந்தனர். கடவுள் நம்பிக்கை யில்லாதார் சிலரும் எம்பாற் போந்து, 'கடவுள் அறிவுச்சுடர் என்னும் இக்கொள்கை எங்கட்கும் ஏற்றதொன்றேயாகும்' எனக் கூறி மகிழ்ந்தனர். எங்ஙனமாயினும், எமது சிற்றறிவால் அளந்து ரைத்த சிற்றுரை, அளக்கலாகாப் பேரொளிவடி வினனான இறைவன்றன் அளப்பரிய மாட்சியினை அன்பர்கட்கு ஒரு சிறிதாயினும் விளங்கவைத்து அவரை மகிழ்வித்ததே யாம் பெற்ற பேறேனக் கருதி இறைவன் றிருவடிக்கு எமது புல்லிய வணக்கத்தைச் செலுத்தி, இந்நூலைத் தமிழுணர்ந்தார் எல்லார்க்கும் பயன்படும்படி அவர் எல்லாரிடையும் உய்க்கின்றேம்.

பல்லாவரம்,

6

பொதுநிலைக் கழகநிலையம்,

திருவள்ளுவர் ஆண்டு 1970, ஆனி, 32.

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/31&oldid=1592746" இலிருந்து மீள்விக்கப்பட்டது