உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

277

இனித், தம் பழம்பிறவிகளை நினைவுகூர்வாரைப் போலவே தமக்கு வரப்போகும் பிறவிகளை முன்னறிந் துரைப்பாரும் ஆங்காங்குளர். அதற்குச் சான்றாக, மேற் குறித்த நூலிலிருந்தே மற்றுமோ ருண்மை நிகழ்ச்சியினை ஈண்டெடுத்துக் காட்டுவாம்:

இத்தாலியா தேயத்தின்கட் பாலர்மோ என்னும் ஊரிலிருந்த சமோனா என்னும் ஆசிரியர் ஐந்தாண்டுள்ள அலெசாந்திரா என்னுந் தம் மகளை 1910ஆம் ஆண்டு இழந்து போனார்; பெற்றோர்கள் அடைந்த துயரமோ மிகப் பெரிது.

ஆனால், ஒருநாள் இரவில்

செய்யப்பட்டமையாற்

அப்பிள்ளையின் தாய் இறந்துபோன அம்மகளைத் தனது கனவிலே காண, அது தான் மற்றுமொரு தங்கையுடன் தன் தாயின் வயிற்றிலேயே வந்து பிறக்கப் போவதாக உறுதிமொழி புகன்றது. இக்கனவானது பலமுறை தோன்றியது. ஆனால், 1909ஆம் ஆண்டில் அப் பிள்ளையின் தாய்க்குக் கருப்பையை அறுத்து மருத்துவஞ் கனவிற்றோன்றிய அப்பெண் பிள்ளையின் உருவம் மொழிந்தபடி நடக்கு மென்பது எதிர்பார்க்கக் கூடியதாயில்லை. என்றாலும், 1910 ஆகிய அதே ஆண்டின் நவம்பர்த் திங்கள் 22ஆம் நாள் அவ்வம்மையார் இரண்டு பெண் மகவுகளை ஒருங்கே ஈன்றனர். அம்மகவுகளில் ன்று வளர்ந்தபின், அது முன்னே இறந்துபோன பெண் பிள்ளையின் வடிவத்தையுஞ் சாடைகளையும் முழுதும் ஒத்திருத்தல் கண்டு எல்லாரும் வியப்படைந்தனர். இந்நிகழ்ச்சி யானது புதினத்தாள்களில் வெளியிடப்பட்ட போது, இதைப் பற்றியதொரு வழக்கு அறிவாராய்ச்சி வல்லாருள் நடைபெறலாயிற்று. அப்போது சமோனா என்னும் ஆசிரியர் 1905 ஆம் ஆண்டிலும் 1910ஆம் ஆண்டிலுந் தமக்குப் பிறந்த அப் பெண்குழந்தைகள் இரண்டும் ஒன்றேயென நிலைநாட்டினர்.4

இம்மெய்ந் நிகழ்ச்சி கொண்டு, எதிர்காலத்திற் றமக்கு வரப்போகும் பிறவி இன்னதெனத் திட்டமாய் எடுத் துரைக்கக் கூடியவர்களும் உளரென்பது நன்கு புலனா கின்றதன்றோ? என்றிதுகாறும் விளக்கியவாற்றால், ஒவ்வோருயிர்க்கும் முற்பிறவி பிற்பிறவிகள் பல உண்டென் பதும் முற்பிறவியிற் றொடர்ந்து செய்த வினைகளே பிற்பிறவிக்கு ஊழ்வினையாகி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/302&oldid=1593036" இலிருந்து மீள்விக்கப்பட்டது