உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் - 31

வந்ததனை நினைவு கூர்ந்து வந்தார். தாம் இருந்த அவ்வீட்டின் அடையாளங்களையும் தாம் அங்கே இளம் பருவத்தில் இறந்துபோன வகையினையும் விளக்கிச் சொல் லக்கூடியவராயு மிருந்தனர். 1913ஆம் ஆண்டில் தமது நாற்பத்தைந்தாம் அகவையில் அவ்வம்மையார் முதன் முதலாக இத்தாலி தேசத்திற்குச் சென்றபோது, ஜினோவா நகரத்தைச் சூழவிருந்த நாட்டுப்புறமே தாம் முற்பிறவியில் உயிர் வாழ்ந்த இடமாதலைத் தெரிந்து கொண்டார். அவ்வம்மையார் அந்நாட்டுப் புறத்தில் தாம்

து.தாம்

அவர்

இருந்த இல்லத்தின் அடையாளங்களைத் தம் நண்பரொருவர்க்கு எடுத்துச் சொன்னபோது, அத்தகைய இல்லம் இருக்குமிடத்தைக் குறிப்பிட்டுக் கூறினர். அம்மையாரும் அவ்வில்லத்திற்குச் செல்லும் வழியைத் தாமே தெரிந்து கொண்டதுடன், அவ்வில்லத்தையுந் தாமாகவே போய்க் கண்டுபிடித்தார். அதனொடு அவ்வீட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியினையும் அம்மையார் நினைவு கூர்ந்திட்டார். அந்நிகழ்ச்சி அறிஞர் சிலரால் ஆராய்ந்த பார்த்து மெய் யெனவுந் துணியப்பட்டது. தாம் இறந்து போனபோது தம்மை அடக்கஞ் செய்த இடம் இடுகாடு அன்றென்றும், மற்று அது குறிப்பான ஒரு மாதா கோயிலின் கண்ணதாகு மென்றும் அம்மையார் எடுத்துரைத்தார். அவர் குறிப்பிட்ட அவ் வில்லத்தின் கண்ணே ஒரு நூற்றாண்டுக்கு முன் ஓர் இளமாது உயிர்வாழ்ந்து வந்ததும், அவர் தாம் இளமையாயிருந்த பருவத்திலேயே 1809 ஆம் ஆண்டு, அக்டோபர், 21ஆம் நாள் இறந்துபோயதும், ரேனாட் அம்மையார் குறித்துக் காட்டிய அந்த மாதாகோயிற் புறத்தேதான் அவ்விளைய மாதரார் அடக்கஞ் செய்யப் பட்டதும் எல்லாம் எளிதாக ஆராய்ந்து உண்மையெனக் காணப்பட்டன வென்பது.

13

இவ்வாறு தமது முற்பிறவியின் வரலாற்றை நன்கு நினைவுகூர்ந்த ரேனாட் அம்மையாரைப் போலவே, தத்தம் பழம்பிறவி நிகழ்ச்சிகளை நன்கு நினைவு கூர்ந்துரைத்தாரும் உரைப்பாரும் இன்னும் பலர் உளர். அவரையும் அவர் கண் காட்சிகளையுமெல்லாம் ஈண்டு எடுத்துக்காட்டுப் புகின் மிக விரியுமென அஞ்சி விடுத்தாம் என்க.

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/301&oldid=1593035" இலிருந்து மீள்விக்கப்பட்டது