உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

275

பிணைத்த காதலன்பே,

உயிரையும் உடம்பையும் ஒருங்கு இறைவன்றரும் பிற்பிறவிகளிலும் அவர் கட்டுங்காவலுங் கடந்து ஒருவர் மீதொருவர் காதலன்பு பாராட்டுதற்கு ஒரு துணைக் கருவியாய் நிற்குமென ஆசிரியர் இச்சூத்திரத் தோதிய கொள்கையே பண்டைத் தமிழ் மக்களின் கோட் பாடாதல் பெறப்பட்டமை காண்க.

னி, முற்பிறவிகள் பல பல ஒவ்வோருயிர்க்கும் உண் டென்பதும், அம்முற்பிறவிகளில் உயிர்கள் தொடர்ந்து செய்த வினைகள் அவர்களின் நினைவிலேறி அழுத்தமாய்ப் பதிந்து அவர்கள் பிற்பிறவிகளை யெடுத்து இன்ப துன்பங்களை நுகர்தற்கு ஒரு துணைக் கருவியாய் நிற்கு மென்பதும், தவத்தான் மனந்தூயராஞ் சான்றோர்க்குப் பழம்பிறவிகளிற் றாம் வாழ்ந்த வாழ்க்கையின் வரலாறுகள் நன்கு நினைவுக்கு வருமென்பதும், ஞ்ஞான்றும் பழம் பிறவிகளின் நினைவு நன்கு வாய்க்கப் பெற்றார் சிலர் எல்லா நாடுகளிலும் டையிடையே காணப்படுகின்றன ரென் பதும் மேனாட்டாசிரியர் பலரால் நன்காராய்ந்து ஆங்கில மொழியில் நூல்கள் வாயிலாக வெளியிடப்பட் டிருக்கின்றன. அவை தம்முள் சார்லஸ் ஜான்ஸ்டன்' என்னும் ஆசிரியர் வரைந்த பழம் பிறவிகளின் நினைவு' என்னும் நூலும், லுதோஸலாஸ்கி என்னும் ஆசிரியர் ஆக்கிய முற்பிறவி பிற்பிறவி என்னும் நூலும், தியோபில் பாஸ்கல்" என்னும் ஆசிரியர் இயற்றிய மறுபிறவி" என்னும் நூலும் இத்துறையில் உள்ளதை உள்ளவாறே கண்டு தெளிய விழைகுவார்க்குப் பெரிது பயன்படும் அரிய ஆராய்ச்சி நூல்களாகும். இந்நூல்களை ஊன்றிப் பயில்வார்க்குப் பழம்பிறவிகளை நன்கு நினைவு கூர்வார் இஞ்ஞான்றும் ஆங்காங்கு உளராதல் ஐயுறவின்றி யறியப்படும். அங்ஙனம் அவ்வாசிரியர்களாற் காட்டப்பட்ட பல மெய் வரலாறு களுள், லுதோஸலாஸ்கி' என்பார் காட்டியதொன்றை இங்கே மொழி பெயர்த்து வரைகுவாம்.

<

66

8

ந்த நூற்றாண்டின் துவக்கத்திற் பாரிஸ் மாநகரத் தில் உறைந்த ‘லாரிரேனாட்’12 என்னும் ஓர் அம்மையார் தாங் குழந்தையாயிருந்த பருவந் தொட்டே தாம் முற்பிறவியில் வெயில் மிகுந்த ஒரு நாட்டின்கண் ஒரு வீட்டில் உயிர் வாழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/300&oldid=1593034" இலிருந்து மீள்விக்கப்பட்டது