உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் - 31

என்னுந் தொல்காப்பியர் சூத்திரத்தின் உண்மைப் பொருள்தான் யாதோவெனின்; அஃது யாம் மேலே விரித்து விளக்கிய பகுதியால் நன்கு விளங்குமாயினுஞ் சூத்திரத் தோடு ஒட்டி அதற்குச் சிறிது உரைகூறுவாம்:

ஒன்றே வேறே என்ற இருபால்வயின் மேற்பிறவிகளிற் கட்டுங்காவலுமின்றி ஓர் ஆடவனும் ஒரு மங்கையுந் தாம் ஒன்றாய்க் கலந்தொழுகிய பகுதியுங் கட்டுங் காவலுந் தோன்றிய பிற்பிறவிகளில் அவர்தாம் வேறாயிருந்தொழுகிய பகுதியும் என்ற ஈரிடத்தும். ஒன்றி உயர்ந்த பாலது ஆணை யின் அவர்தம் உள்ளத்தே காதலுணர்வாய்ப் பிணைந்து நின்று பிறவிகடோறும் மேன்மேல் வளர்ந்த பழக்கமா யுயர்ந்த ஊழ்வினையின் ஏவுதலாலே, ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப எல்லா நலங்களாலுந் தம்முள் ஒத்த தலைமகனுந் தலைமகளுந் தமக்கிடை நின்ற கட்டையுங் காவலையுங் கடந்து ஒருவரையொருவர் எதிர்ப்படுவர், மிக்கோனாயினுங் கடிவரை சில நலங்களில் தலைமகன் தலைமகளை மிக்கவனாயினும் அவரது கூட்டங் கடியப்படும் அளவினை யுடையதாமாறில்லை என்பது; ஏ: அசைநிலை

இன்று

-

-

.

முதலடியில் நின்ற ‘பால்' என்னுஞ் சொல் பகுதி என்னும் பொருளிலும், இரண்டாமடியில் நின்ற 'பால்' ஊழ்வினை யென்னும் பொருளிலும் வந்தன; ‘பால்’ ஊழ்வினைப் பொருட்டாதல், “பால்வரை தெய்வம்” என என ஆசிரியர் சொல்லோத்திற் கூறியவாற்றால் அறியப்படும். 'ஆணை என்பது மேலோர் கீழோரைத் தஞ்சொல்வழி வைத்து நடப்பிப்பது: ஊழ்வினையுந் தெய்வம் போல் நின்று உயிர்களை ஏவுதலிற் “பாலது ஆணை” என்றார். உயிர்கள் மேற்பிறவிகளிற் செய்த வினைத் தொகுதியாகிய ஊழைத் தெய்வமென்றால் ஒக்குமோவெனின்; அறமன்றத்தில் அவ்வவர் செய்வினைக்குத் தக்கபடி இன்பதுன்பங்களை வகுக்கும் ஒரு நடுவன்போல, இறைவனும் உயிர்கள் செய் வினைகட்குக் தக்கபடி பிறவி களையும் அப்பிறவிகளில் இன்ப துன்பங்களையும் உயிர்கட்கு வகுத்தளிக்கின்றா னாகலின், இறைவன் செயலுக்குத் துணையாய் நிற்கும் ஊழ்வினையும் இறைவனென்று ஒப்பித் தோதப்பட்டது. எனவே, மிகப் பழைய முற்பிறவியிற் காதலரிருவர் தம் உள்ளத்தே முதன்முதற் றோன்றி அவர்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/299&oldid=1593033" இலிருந்து மீள்விக்கப்பட்டது