உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்

தமிழர் மதம்

""

யதனை மறந்தான்; மறப்புழியும், அதுதான் மறவாது, இவர்களையுங் கண்ணுறவித்து,’ இவர்க்குத் துப்புமாயிற் றாகலான் விசேடிக்கப் பட்டது.

273

இவ்வுரைப்பகுதியிற் பேராசிரியர் பண்டைப் பிறவியில் ாய ய நல்வினையே காதலிருவரை ஒருங்குகூட்டும் ஊழ்வினையாமென்றும், ஊழ்வினையாவது ‘செயப்படும் வினையினது நியதியன்றே' என்றும் உரைத்து விளக்கினமை, மேலேகாட்டிய எமது உரை விளக்கத்தினையே முழு தொத்து நிற்றல் கண்டு கொள்க.

ன்

ங்ஙனந் தொல்லாசிரியரான தொல்காப்பியனாரும், அவரது மரபு கடைப்பிடித்து அதனொடு மாறுபடாதுவந்த நக்கீரனார், மாணிக்கவாசகர் முதலான சான்றோரும் முற்பிறவியும் ஊழ்வினையும் உண்டென்னுங் கொள்கையில் ஒத்து ஒருமுகமாய் நிற்கவும், அவர்க்கெல்லாம் முற்றும் மாறாய் ஊழ்வினை இல்லையென்றும், அது காதலன்புக்குத் துணைக்காரணமாதல் செல்லாதென்றும் இஞ்ஞான்றை அறிஞர்சிலர் கூறுதலுடன் அமையாத, தொல்காப்பியனார் கூறியருளிய "ஒன்றே வேறே" என்னும் நூற்பாப்பொரு ளினையுந் திரித்து அதற்குத் தாமோர் ஏலாவுரையினையும் வரைந்திட்டார். ஒருநூலுக்கோ, அல்லததன்கணுள்ள பாவுக்கோ உரைகாணப் புகுவார், அவற்றை இயற்றிய சிரியன்றன் கருத்துக்குங் கொள்கைக்கும் மாறாகாமல் உரைகாணலே வாய்மை யாகுமன்றித், தமது கொள்கைக் கிசைய ஆசிரியன் கருத்தை மாற்றி உரைகாணல் வாய்மை யாகாது; அவர் தமது கொள்கையை நாட்டல் வேண்டினா ராயின் தாம் அதற்ன்ெறொரு புதுநூல் எழுதுதலே முறையாம். அதுகிடக்க.

66

இனி,

"ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/298&oldid=1593032" இலிருந்து மீள்விக்கப்பட்டது