உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் - 31

ஊழ்வினையை யாரு துணைக்காரணமா உரைக்கும் நக்கீரனார் மாணிக்கவாசகப் பெருமான் முதலான தொல்லாணை நல்லாசிரிய ருரைக்கெல்லாம் அவருரை மாறாமாகலானும் என்க.

66

ПШ

அற்றாயின், இ வனோடு இவளிடை உண்ட அன்பிற்குக் காரணம் விதியல்லாமை ஈண்டுப் பெற்றாம்” என்று பேராசிரியர் திருக்கோவையாருரையிற் கூறிய தென்னை யெனின்; முற்பிறவியிற் காதலரிருவரிடத்துந் தோன்றிய காதலன்பு ஊழ்வினையின் றொடர்பாற் றோன்றிய தன்று என்பதே எமது கருத்துமாகும். முற்பிறவியிற்றோன்றிய ய காதலொழுக்கம் இருவர் மாட்டும் நிலைபெற்ற பழக்கமாகிப் பிற்பிறவியில் அவர்க்கு ஊழ்வினையுமாய் நின்று, அவரைக் கட்டுக் காவலினின்றும் விடுவித்து, அவரை ஒருங்கு கூட்டுதற்கு ஒரு துணைக் காரணமாமென்பதே பேராசிரி யர்க்குங் கருத்தாகும். இது, திருக்கோவையார் ஏழாந் திருப்பாட் டுரையில் அவருரைக்கு முரையால் வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடக்கின்றது; அவ்வுரை வருமாறு:

“பாங்கற்கூட்டந் தோழியிற் கூட்டம் என்றி வற்றில் அவர் துணையாய வாறுபோல், விதியும் இவரை ஆயத்தின் நீக்கிக் கூட்டின மாத்திரை யே யன்றி அன்பிற்குக் காரணம் அன்றென்பது. அல்ல தூஉம், விதியாவது செய்யப்படும் வி னையினது நியதியன்றே; அதனானே அன்பு தோன்றிப் புணர்ந்தாரெனின், அதுவுஞ் செயற்கைப் புணர்ச்சி யாய் முடியும்; அது மறுத்தற் பொருட்டன்றே தொல்லோர் இதனை இயற்கைப்புணர்ச்சி யென்று குறியிட்டது. பலபிறப்பினும் ஒத்த அன்பென்றா ராகலின், பல பிறப்பினும் ஒத்து நிற்பதோர் வினை யில்லை யென்பது, அஃதேல், மேலைச் செய்யுளில் வினை விளைவே கூட்டிற்றாக விசேடித்துச் சொல்ல வேண்டிய தென்னை யெனின்; இம்மையிற் பாங்கனையுந் தோழியையுங் குறையுற, அவர்கள் தங்களினாகிய கூட்டங் கூட்டினார்கள். உம்மை நல்வினையைக் குறையுற்று வைத்து, இம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/297&oldid=1593031" இலிருந்து மீள்விக்கப்பட்டது