உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

271

அடியாருந் தாந்தாம் பழகிய நற்பழக்கமாகிய ஊழ்வினையால் உள்ளம் ஊக்கப்பட்டுத் தம்மோடொத்த கலை வல்லாரையும் அறவரையுஞ் செல்வரையுந் தொண்டர்களையும் நாடித் தாடர்தல் போலவுங், க காதற்கிழமையால் நெஞ்சம் ஈர்க்கப்பட்டு விழுப்பெருங் கேண்மை கொண்டொழு கினாரும் அவ் வொழுக்கமாகிய ஊழ்வினையால் உய்க்கப்பட்டுப் பிற்பிற் பிறவிகளிலுங் காதல் கொண் டொழுகுவரென்றுணர்தல் வேண்டும். இவ்வாறு பிறவிகடோறுங் காதலால் இணைக்கப் பட்டு இன்ப வாழ்க்கையில் நிலைப்படுவாரின் அன்பே உழுவலன்பு' ஆகும் என்று பழைய தமிழ் நூல்கள் பகரா நிற்றலுங் காண்க.

ங்

ஊழ்வினையின் உண்மையிலக்கணம் இங்ஙனம் யாங் கூறியவா றுள்ளதனை ஆய்ந்துணர வல்லார்க்குப், பிற் பிறவிகளிற் காதலரின் கூட்டம் அவரகத்திருந் தெழூஉம் ஊழ்வினையாகிய முற்பிறவிப் பழக்கத்தினால் நிகழும் என்பதே ஆசிரியர் தொல்காப்பினார் தங் கருத்தாதல் நன்கு விளங்கா நிற்கும். இப்பொருள் காணமாட்டாமையின், ஆசிரியர் “பாலது ஆணை” என்று மேலைச் சூத்திரத்திற் கூறிய சொற்றொடர்க்கு, ஆணானது பெண்ணையும், பெண்ணானது ஆணையு காமுறுதலாகி “பாலின் ஏவல்” என்று பொருளுரைத்தாரும் இஞ்ஞான்றுளர். அவருரை பொருந்தாது; என்னை? ஆணானது பெண்ணமைப்பைக் கண்டு விழைதலும், பெண்ணானது ஆணவமைப்பைக் கண்டு விழைதலும் வெறுங் காமமே யாகுமல்லாமல், எழிலுங் குணமும் அறிவுங் கண்டு வியக்கும் விழுமிய உணர்வின்5 வழித்தாகிய காதலொழுக்க மாதல் செல்லாமை யானும், அன்பினைந்திணைப் பாற்பட்ட காதலொ ழுக்கத்தை விளக்குவான் புகுந்த ஆசிரியரின் கூற்றுக்குப் புல்லிய காமவொழுக்கத்தைப் பொருளாகக் கூறுதல் அவரது சாலவுயர்ந்த கருத்துக்கு முழுமாறா மாகலானும், சொல்லோத்தில் ஆசிரியர் ஊழ்வினையைப் “பால்வரை தெய்வம்” எனக் கூறினாற்போலவே களவியற் சூத்திரமாகிய "ஒன்றே வேறே என்றிரு பால்வயின்" என்னு மிதன் கண்ணும் ஊழ்வினையின் ஏவற்றன்மை தேற்றிப் “பால என்று நுவலுதலானும், ஆசிரியர் தொல்காப்பிய னாரது இலக்கணத்தை யொட்டியே காத லொழுக்கத்திற்கு

தாணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/296&oldid=1593030" இலிருந்து மீள்விக்கப்பட்டது