உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

ஓராண்மகனும்

மறைமலையம் - 31

ஒருபெண் மகளும் ஏதொரு கட்டுப் பாட்டினாலுஞ் சிறை செய்யப்படாமல் எளிதிலே யொருவரை யொருவர் கண்டு காதல் கொண்ட இயற்கை நேயமும் ஆகும். அச்சிறார் பெரியராகிக் கல்லூரியை விட்டுச் சென்று வேறுவேறு தொழின் முயற்சியிற் புகுந்து நெடுங்காலம் ஒருவரை யொருவர் காணாதிருந்தமை போல்வதே, பண்டைக் காதலர் பண்டைப் பிறவியொழிந்து நெடுங்காலஞ் சென்று பின்றைப் பிறவியிற் புகுந்து ஒருவரை யொருவர் காணா திருந்தமை யாகும். இனி, அப்பள்ளிக்கூட நண்பர் ஒருவரை யொருவர் தற்செயலாய் எதிர்ப்பட்டு மனங்கரைந் தாற்றாராய்த் தம்மவர் சினத்தையுங் கருதாது ஒன்றுகூடி வாழ்ந்தமை போல்வதே, பண்டைக் காதலரும் பின்றைப் பிறவியில் தற்செயலாய் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டுக் காதற் கெழுதகைமை யுட் கொண்டு தம்மவரது ஒறுப்பினைக் கருதாது ஒருங்கு கூடி வாழ்வதாகும் என்க. எனவே, காவலுங் கட்டும் இல்லாப் பண்டைப்பிறவியில் ஓராண்மகனும்

பெண்மகளும் ஒருவரையொருவர் இன்றியமையாராய்க் கருதியொழுகிய ஒழுக்கமே அவரால் நீக்க முடியாத ஊழ்வினையாய் அவ்விருவர்தம் உள்ளத்தே அமைந்து கிடந்தமையின், அஃது அவர் காவலுங்கட்டும் மிகுந்த பிற் பிறவிகளிலும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டவுடனே அத் தடைகளைக் கீழ்ந்து அவரை ஒன்றுபடுவிக்குந் துணைக் காரணமாயிற்று. அறிவாலும் ஆள்வினையாலும் அவ்விருவர் மாட்டும் முதன்முற் றோன்றிய காதலொழுக்கமே அவர்பாற் றொடர்ந்து நடைபெற்று அவர்க்கு ஊழ்வினையாயிற்று. ஒருவர்பாற் றொடாந்து நடைபெறும் வினையே பழக்க மென்றும், அப்பழக்கமே அவரைப் பிற்பிறவிகளில் முனைத்து நின்று தனக்கிசையச் செலுத்துங் கால் ஊழ்வினையா மென்றுஞ் சொல்லப்படும். இத்துணை யேயன்றி ஊழ்வினை யென்பது உயிர்களுக்குப் புறம்பாய் நின்று அவரைச் செலுத்து வதென் றுரைப்பாருரை சிறிதும் பொருந்தாது. குடி, களவு, சூது முதலான தீயசெயல்களிற் பழகினவன் அப்பழக்கமாகிய ஊழ்வினையால் உள்ளம் உந்தப்பட்டுத் தன்னோடொத்த குடியர், கள்வர், சூதர் முதலானவர்தம் நேயத்தை நாடிச் செல்லுதல் போலவுங், கற்றாரும் அறம்புரிவாருஞ் செல்வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/295&oldid=1593029" இலிருந்து மீள்விக்கப்பட்டது