உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

269

முன்னைப்பிறவிகளிற் காதலிற் குழைந்துருகி ஒன்றுபட்ட அவருடைய உள்ளங்களிற் காதற்கிழமையும் ஒழுக்கமும் உயிர்க்குணமாய் ஒரு பழக்கமாய் வேரூன்றி நிலைபே றுற்றமையின், அப்பழக்கமே அவர்க்கு ஊழ்வினையாய் நின்று,

நாகரிக காலத்தில் எடுத்த பிற்பிறவிகளில், அவர் ஒருவரையொருவர் கண்ட துணையானே, அவர் தம் உறவினர் கட்டிய கட்டுப் பாடுகளைப் பிளந்தெறிந்து, அவரைக் காதலன்பில் ஒருங்கு பிணைத்து வைப்பதாயிற்றென்க. இதனை இப்பிறவியில் நிகழும் ஒரு நிகழ்ச்சியில் வைத்து விளக்கிக் காட்டுதும். ஒரு பள்ளிக் கூடத்திற் கல்வி பயிலுங் சிறார் தமக்குள் உண்டாகும் நேயமானது, அவர்தம் உறவினர் அறியாமலே, அவர்தம்மில் இயற்கையாய் உண்டாகின்றது; அவருள் ஒருவரை யொருவர் உயிராய்க் கருதி அன்பு பாராட்டுகின்றனர். அத்தகையவருள் ஒருவன் உயர்குல வேளாள குடும்பத்திற் குரியவன்; மற்றொருவன் தாழ்ந்த குடும்பத்திற் குரியவன்; ஆனாலும், அவர் குலவேற்றுமை சிறிதுங் கருதாமலே தம்மிற் பேரன்பு பாராட்டி விட்டனர். இருவருங் கலைபயின்று கல்லூரியை விட்டுப் பிரிந்துபோய், வெவ்வேறு தொழின்முயற்சியிற் புகுந்து, ஒருவரை யொருவர் காணப் பெறாமலே நெடுங்காலம் கழித்து விட்டனர். அதன்பின் ஒருநாட் தாழ்ந்த குடும்பத்திற்குரியவன் பெரியனாய் வளர்ந்து தற்செயலாய்த் தன் நண்பனான வேளாளனை ஓர் ஊரில் எதிர்ப்படலானான். அவனைக் கண்ட துணையானே தான் உயர்குலத்தவன் என்பதனையும் அறவே மறந்து அத்தாழ்குல மகனைத் தழுவிக் கண்ணீர் சிந்திக் கரைந்தழுது, அவனைத் தானிருந்த உறையுளுக்கு அழைத்துச் சென்று, அவனுக்கு வேண்டுவனவெல்லாம் ஆரா அன்புடன்செய்து, அவனோ டொருங்கிருந் துணவு கொண்டு, அவனோ டொருங்கு துயில் காண்டு ஒருங்குறைவானானான். அவ்வேளாளனின் பெற்றாரும் உற்றாரும் அவன் ஒரு தாழ்குல நட்புக் கொண்டு அளவளாவுதலைக் கண்டு மிகச்சினந்தும் அவன் அதனை ஒரு பொருட்டுபத்திற்றிலன். இந்நிகழ்ச்சியில் வைத்துக் காதலரின் உறவும் அறியற்பாற்று. பெற்றாருற்றார்தங் கட்டுப்பாடுகள் நெருங்காத பள்ளிக் கூடத்திற் பயிலுஞ் சிறார்தம் இயற்கை நேயம் போல்வதே, நாகரிகங் குறைந்த பண்டைக்காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/294&oldid=1593028" இலிருந்து மீள்விக்கப்பட்டது