உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

268

எனவும்,

மறைமலையம் - 31

“ஏழுடை யான்பொழி லெட்டுடை யான்புயம் என்னை முன்னாள் ஊழுடை யான்புலி யூரன்ன பொன்இவ் வுயர்பொழில் வாய்ச் சூழுடை யாயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே

யாழுடை யார்மணங் காண் அணங் காய்வந் தகப்பட்டதே"

எனவும்,

“சொற்பால் அமிழ்திவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நான்இவ ளரம்பகுதிப் பொற்பார் அறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பிற் கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே

அவர்

எனவுந் தொடர்பாகத் திருக்கோவையார் மூன்று திருப் பாட்டுகளிற் காதலரின் சேர்க்கைக்கு ஒரு துணைக் காரண மாய் நிற்பது ஊழ்வினையேயென வற்புறுத்துரைத் தருளுமாற்றால் நன்கு பெறப்படாநிற்கும்; மூன்றாந் திருப் பாட்டிற் போந்த 'நற்பால் வினைத்தெய்வம்' என்னுஞ் சொற்றொடர் தொல்காப்பியத்திற் போந்த 'பால்வரை தெய்வம்' என்னுஞ் சொற்றொடரைப் பெரிதொத்து நிற்றலும் நினைவிற் பதிக்கற்பாற்று.

அற்றேற், காதலர் தம்மகத்தெழுந்த காதலாற் கூடாமற் றமக்குப் புறம்பான ஊழ்வினையாற் கூட்டப்படுவரெனின், அது மக்கட் செயலாகாமல் ஊழ்வினைச் செயலாய் முடிந்து, மக்கள் தமக்கென வோர் அறிவுந் தமக்கென ஒரு முயற்சியும் உடையர் என்னும் பண்டைத் தமிழர்தங் கொள்கைக்கு முரணாமா லெனின்; அற்றன்று, மக்கள் நாகரிக வாழ்க்கைக்கு வந்த பின்னரே ஆண்மகனும் பெண்மகளுந் தமக்குரிய உறவினரின் பல கட்டுப்பாடுகளுக் குள்ளடங்கி ஒருவரை யொருவர் நெருங்கிப் பழகுதல் இயலாதாயிற்று. மற்று, அவர் நாகரிக வாழ்க்கைக்கு வராத மிகப் பழைய காலத்திலெல்லாம், ஒருவரோடொருவர் நெருங்கிப் பழகுதல் எளிதாயும் இயல்பாயும் இருந்தமையின் அழகிய ஓர் ஆண்மகனும் அழகிய ஒரு பெண்மகளும் ஊழ்வினை யின் துணையின்றியே யொருவரை யொருவர் உயிர்போற் காதலித்து ஒருங்கு கூடி வாழ்ந்து வரலாயினர். அங்ஙனம் நாகரிகங் குறைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/293&oldid=1593027" இலிருந்து மீள்விக்கப்பட்டது