உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

267

158). காதலிற் சிறந்த ஓர் ஆண்மகனையும் ஒரு பெண் மகளையும் ஒருங்கு தலைப்பெய்வித்தற்கு ஒருதுணைக் கருவியாயிருந் துதவுவது ஊழ்வினையேயாம் என்னுங் கொள்கையிற் பண்டைத் தமிழாசிரியர் திட்பமாய் நின்றமை பற்றியே ஆசிரியர் தொல்காப்பியனாருங் 'களவியலில்,'

“ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே"

என்றருளிச் செய்தார். மேற்சென்ற பிறவிகளிற் காதலன்பு பாராட்டிவந்த ஆண்பெண் பாலாரே கீழ்க்கீழ்ப் பிறவிகளிலுங் காதலராய் ஒருவர்மீ தொருவர் அயரா அன்பு செலுத்துநீரராய் ஒழுகுவரென்பதே பண்டைத் தமிழா சிரியரது நம்பிக்கை யாகும். கோவலன் புதல்வியான மணிமேகலையைச் சோழ மன்னன் புதல்வனான உதயகுமரன் காதலிக்க, மணிமேகலை துறவொழுக்கத்தில் விருப்பமுடையளா யிருந்தும் அவளது நெஞ்சம் அவள் வயமின்றி யே அவ்வரசிளைஞனைக் காதலிக்கவும் அவர்தங் காதலின் விளைவாக அவர் ஒன்றுகூடப் பெறாமல், உதய குமரன் ஒரு விஞ்சையனால் வெட்டுண்டு வீழ அதுகண்டு நெஞ்சந்துடித்தலறியழுத மணிமேகலையை நோக்கிக் கந்திற்பாவை கூறுங் கூற்றாகப் போந்த,

“நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம் மனக்கினி யாற்குநீ மகளாய தூஉம் பண்டும் பண்டும் பல்பிறப் புளவால்”

(21, 29 -31) இவ்வுண்மை இனிதறியப்படும்; இங்கே மகன் மகள் என்றது மணமகன் மணமகளை. இதுவே, பழந்தமிழ்க் கொள்கையினை முழுதுந் தழீஇநின்ற மாணிக்க வாசகப் பெருமான் திருவுள்ளக் கிடையுமாதல்,

66

'வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்

துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக் கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/292&oldid=1593026" இலிருந்து மீள்விக்கப்பட்டது