உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

  • மறைமலையம் – 31

வி

வாழ்க்கை ஒருசிறிதுமே நடவாது. ஒரு மனைவி இன்று காணுந் தன் கணவன் நேற்றுந் தனக்குக் கணவனாய் அமர்ந்தவனே என்று கருதா விட்டாலும், நாளையும் அவனே தன் கணவன் ஆவன் என்று கருதா விட்டாலும் அவள் அவனோடு ஒருமித்து வாழ்தல் இயலுமோ? அங்ஙனமே பிள்ளைகளைத் தாய் தந்தையரும், தாய் தந்தையரைப் பிள்ளைகளும், ஆசிரியர் மாணாக்கரை யும் மாணாக்கர் ஆசிரியரையும், பலரொடு பண்டம் மாற்றி வாணிகம் புரிவோர் தம்முள் ஒருவர் மற்றொருவரையும், அரசன்கீழ் நின்று அரசியல் நடத்துவோர் தம்முடன் தொடர்புற்று நிற்பாரையும் ‘நேற்றிருந்தவரே இவர்’ என்றும் ‘நாளையும் இவர் இருப்பர்’ என்றும் உறுதியாய்க் கருதி யொழுகிவராவிடின் எல்லா வுயிர்கட்கும், அவ்வுயிர் களுட் சிறந்த மக்கட்கும் இவ்வுலக வாழ்க்கையானது சென்ற பல்லாயிர மாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்குமோ? ஒரு சங்கிலியின் இடைநின்ற ஒரு கண்ணானது தனக்கு முன்னும் பின்னும் ஒருவரிசையாய்த் தொடர்ந்து நிற்கும் ஏனைப்பல கண்களினிருப்பையும் அறிவித்தல் போல, உயிர்கட்கு நிகழ்காலத்தில் நிலவும் ஒரு பிறவியானது, அவைகட்கு முன்னும் பின்னுந் தொடர்பா யுள்ள ஏனைப்பல பிறவிகளின் இருப்பையும் நன்கு நினை வுறுத்தல் அறிவிற் பதிக்கற் பாற்று. நிகழ்கால வுணர்வை இறந்தகால எதிர்கால நிகழ்ச்சிகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் அறிவாற்றல் உடையரா யிருத்தலினாற்றான், மக்களென்போர் விலங்கு களினுஞ் சிறந்த பிறவியினரா யினர். அங்ஙனம் நிகழ்கால நிகழ்ச்சியைத் தொடர்புபடுத்திப் பார்க்கமாட்டாமல் நினைவு பிறழ்ந்து போனவர்களே கிறுக்குப் பிடித்தவராகித் துன்புற்றிறக் கின்றனர். ஆகையால், முற்பிறவி பிற்பிறவிகளுடன் இப் பிறவி யைத் தொடர்பு படுத்தி ஆராய்ந்து பார்த்து, அவ்வாற்றால் ஊழ்வினையால் வரும் நன்மையைப் பெருக்கி, அதனால் வருந் தீமையை யொடுக்கி இப்பிறவியைத் தூய்மை செய்பவர்களே இம்மை மறுமை வாழ்க்கையின் நலங்கள் முழுமையும் பெறுதற் குரியாரென்பதூஉம் பண்டைத் தமிழரின் விடாப்பெருங் கோட்பாடாகுமென்க.

இவ்வூழ்வினையினையே

தொல்லாசிரியராகிய

தொல்காப்பியனார் “பால்வரை தெய்வம்” என்பர் (சொல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/291&oldid=1593025" இலிருந்து மீள்விக்கப்பட்டது