உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

265

இன்னும், எடுத்த உடம்பைச் செவ்வனே பயன்படுத்தி மேன்மேல் அறிவும் இன்பமும் பெருகப் பெற்ற உயிர்கள் மேன்மேற் பிறவிகளிற் செல்லுமென்றும், அங்ஙனம் அதனைப் பயன்படுத்தி அறிவும் இன்பமும் வளரப் பெறாத உயிர்கள் கீழ்க்கீழ்ப் பிறவிகளிற் செல்லுமென்றும் அறிதல் வேண்டும். தமதுடம்பையும் அவ்வுடம்பின் கருவிகளையும் பயன்படுத்திக் கொள்ளத் தக்கதொரு தன் முயற்சி எத் துணைக் கீழான சிற்றுயிர்களுக்கும் உண்டென்றும் அவை அம்முயற்சியால் உடம்பின் உறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அவ்வுறுப்புகள் சிறிது காலத்திற் செயலிழந்து மறைந்து போகின்றன வென்றும் உயிர்நூல் வல்லாரும் ஆராய்ந்து ரைக்கின்றனர்.

இனிக், கருப்பையிற் கருவானது படிப்படியாய் வளரும் வகைகளை ஆராய்ந்தளந்து கண்ட கருநூலார் ஓர் ஆடவன துடம்பு மக்கள் யாக்கையில் வரும்முன் என்பில்லாத மிகச் சிறு புழு வடிவிலிருந்து எத்தனையோ வகையான சிற்றுயிர்களின் உடம்புகளினூடே பிறவி யெடுத்து வந்திருக்கின்றதென்பதனை ஓவியம் எழுதிக்காட்டி நன்கு விளக்கியிருக்கின்றனர். இதனால் ஒருவனதுயிர் என்பில்லாத மிக நுண்ணியபுழு விலிருந்து எத்துணைச் சிற்றுயிர்ப் பிறவிகளை எடுத்தெடுத்திறந்து, மக்கள் யாக்கையிலும் எத்துணைப் பல பிறவிகளை எடுத்தெடுத்திறந்து செல்லா நிற்கின்ற தென்னுமுண்மை அங்கையங்கனி போல் நன்கு விளங்கா நிற்கின்றதன்றோ?

L

4

எனவே, இப்பிறவியில் ஒருவனிடத்தே காணப்படுங் குணஞ்செயல்களைக் கொண்டும், அவனிருக்கும் மேனிலை கீழ் நிலைகளைக் கொண்டும், அவன் நுகரும் இன்ப துன்பங்களைக் கொண்டும், அவனுக்கு முன்வந்த பிறவிகளின் இயல்பும் பின் வரப்போகும் பிறவிகளின் இயல்பும் ஒருவாறு உய்த்துணர்தல் கூடுமென்பது. இன்றைக்கிருந்து உயிர்வாழும் ஒருவன் நேற்றும் இருந்தானென்றும் நாளையும் இருப்பானென்றும் உய்த்துணரும் உணர்ச்சியினாலேயே, மக்களெல்லாரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையராய் வாழ்க்கை செலுத்தா நிற்கின்றனர். இறந்தகால எதிர்கால நிகழ்ச்சிகளை நிகழ்கால நிகழ்ச்சிகொண்டு உய்த்துணரும் உணர்வு மக்களிடம் அத்துணை வேர் ஊன்றி நில்லா விட்டால், இவ்வுலகில் மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/290&oldid=1593024" இலிருந்து மீள்விக்கப்பட்டது