உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279

6

33. தவவொழுக்கம்

இனி, இம்மையின்பங்களைத் துய்த்து வரும் பொழுதும் நந் தமிழ் முதுமக்கள் அவ்வின்பத்திலேயே மூழ்கித், தமது நிலையினையுந் தாம் பிறவிக்கு வந்ததன் நோக்கத்தினையுந், தமக்குப் பிறவிகொடுத்த தலைவன்றன் திருவுளக் கருத்தினையும் மறந்து போனவர்கள் அல்லர். மற்று, அவர் இம்மையின்பங் களை நுகர்ந்து வருகை யிலேயே, நிலையில்லா இவ்வின்ப நுகர்ச்சி, நிலைபேறா யுள்ள மறுமை யின்பத்திற்கு ஒரு சிறு முதற்சுவையாய் அதன்கட் செலுத்தும் வழியேயா மென்ற எண்ணந் தலைப்பட்டவராயே வாழ்ந்து வந்தனர். ஈது அவர் எந்த உயிர்க்குந் தீங்கு இழையாக் கொல்லா அறத்தைத் தம் வாழ்நாள் முற்றுங் கடைப்பிடித்தொழுகி வந்தமையால் தெற்றென விளங்கா நிற்கின்றது. இம்மையின்பம் உடம்பும் உடம்பிலமைந்த கருவிகளுஞ் செவ்விய நிலையிலிருக்குஞ் சிறிதுகாலம் வரையிற்றான் ஓர் எல்லைக்குள் நின்று நுகர்தல் கூடுமே யன்றி, என்றும் அதனை நுகர்தல் எவர்க்குமே இயலாது என்னும் இவ்வுண்மையினை நந் தமிழ்மேன் மக்கள் தமது வாழ்நாளின் முதலிலிருந்து முடிவுவரை யிலுமே உணர்ந்த வர்கள் என்பது, அவர்களிற் பேர் அரசர்களா யிருந்தவர் களுங்கூட இளமை நிலையாமை யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை முதலான மெய்ம்மைகளை அடுத்தடுத்துப் பாடி மாந்தர்க்கு அறிவு கொளுத்தி யிருப்பதனால் நன்கறியப் படும். இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த தமிழ் வேந்தர்கள் கல்வியறிவிலுந், தம் போன்ற மக்களிடத்தும் பிறவுயிர்களிடத்தும் பாராட்டும் பேரன்பிலும், மெய்ப்புகழ் வேட்கையிலும், பழியஞ்சிய அற வாழ்க்கையிலும் மிக்கு விளங்கினரென்பது இளம்பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் பாடிய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/304&oldid=1593038" இலிருந்து மீள்விக்கப்பட்டது