உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் - 31 *

“உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே, முனிவிலர், துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர், அயர்விலர், அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

و,

(புறநானூறு, 182) என்னும் அரிய செய்யுளால் நன்கறியப் படுகின்றதன்றோ? இதன்கண், "தேவர்கட்குரிய அமிழ்தத்தைப் பெற்றாலும் அதனைப் பிறர்க்குப் பகுத்துக் கொடாமல் தாமாகவே அருந்துவார் இல்லாமையாலும், அன்பின்றித் தம்போன்ற மக்களை வெறுப்பவர் இல்லாமையாலும், பிறர் அஞ்சத் தக்க தீயசெயலுக்குத் தாமும் அஞ்சி அதனை நீக்க முயல்வார் உண்மையாலும், மெய்யான புகழை நிலைநிறுத்துதற்குத் தம்முடைய உயிரையுங் கொடுப்பார் இருத்தலாலும், புகழுக்கு மாறான பழிச்சொல் வருவதானால் உலக முழுதுந் தமக்குடைமையாகக் கிடைப்பினும் அதனைக் கொள்ளா தார் நிலவுதலாலுந், தங் கடமையை மறவாத வருந் தமது நலத்திற்கென்றே முயலாமற் பிறரது நலமே கருதி உழைப்பாரும் உலவுதலாலுமே இவ்வுலகம் அழியாது நடைபெறுகின்றது என்னும் மிக விழுமிய அறவுரை பகரப்படுதல் காண்க இவ்வறவுரை பகர்ந்த பாண்டிமன்னன் இருந்த பழைய காலத்திற் றமிழ்மக்கள் பெரும்பாலும் இவ்வுயர்ந்த அறவொழுக்கத்திற் றலைநின்றாரென்பது தெற்றெனப் பெறப்படுகின்றதன்றோ? இம்மை யின்பங்கள் எல்லாவற்றையும் எஞ்சாமல் நுகர்தற்கேற்ற பருஞ்செல்வ வாழ்க்கையிலிருந்த தமிழ் வேந்தர்களே தவவொழுக்கத்தில் நிலைபெற்ற நினைவினரா யிருந்தன ரென்றால், ஏனை மக்களுங் கலைவல்ல புலவர்களும் இல்லறத்தி னுள்ளுந் துறவற வொழுக்கமே கைக்கொண்டிருந் தாரென்று கூறுதல் மிகையாமோ? மனைவாழ்க்கை நின்ற பண்டை நந் தமிழ்மக்களும் நிலையாமையுணர்ந்து மறுமை யின்பத்தை நோக்கியே நின்றனரென்பதற்குப் பல சான்றுகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/305&oldid=1593039" இலிருந்து மீள்விக்கப்பட்டது