உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

281

மேற்கோள்களும் எமது முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவர் என்னும் நூலுள் யாம் விரிவாக எடுத்துக்காட்டி யிருத்தலால், மீண்டும் அவற்றை இங்கே விரித்திலம்.

இங்ஙனமாக இம்மையின்பந் துய்த்துவரும் வாழ்க் கையிலேயே நம் பழந்தமிழ் மக்கள் பற்றற்ற துறவுள்ளம் வாய்ந்தவரா யிருந்தாற்போல, இருக்குவேத காலத்தாரியர் எட்டுணையேனும் பற்றற்ற தூய அருள்நெஞ்சம் வாய்ந்தவ ராய் இருந்தனரோவென்றால், இருந்திலர். அதனால், “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்குந்” தவவொழுக்கத் தினைப் பழைய ஆரியர் சிறிதுமே யுணர்ந்தவரல்லாமை நன்கறியப்படுகின்றது. இந்திரன், வருணன் முதலான தேவர்கட்கு வேள்விகள் வேட்டு, அவ்வேள்விக்கண் எருதுகள், எருமைகள், ஆக்கள், செம்மறி யாடுகள் முதலான விலங்கினங்களை இரக்கமின்றிக் கொன்று அவற்றின் ஊனையுஞ், சோமப்பூண்டில் இறக்கிய கள்ளையும் அவர்கட்குப் படைத்துத் தாமும் அவற்றை அருந்தி வெறியாட்டு அயர்ந்த ஆரியரது புலையொழுக்கமே அவ்வாரியர் பாடிய இருக்குவேதப் பதிகங்கள் பலவற்றி னுள்ளும் அடுத்தடுத்துப் பாராட்டிச் சொல்லப்பட்டிருக் கின்றது. ஒருகால் இந்திரனுக்கு நூறு எருமைகள் வெட்டிப் பலியாக இடப்பட்டமையும், மற்றொருகால் முந்நூறு எருமைகள் வெட்டி அவனுக்குப் படைக்கப்பட்டமையும் இருக்குவேத ஆறாம் மண்டிலத்துப் பதினேழாம் பதிகத்திலும், ஐந்தாம் மண்டிலத்து இருபத் தொன்பதாம் பதிகத்திலும் முறையே விளக்கமாக எடுத்துச் சொல்லப் பட்டிருக்கின்றன; அங்ஙனமே மூன்றேரியளவு சோமக்கள்ளை இந்திரன் பருகிவிட்டமையும் பிற்சொன்ன 26ஆம் பதிகத்தில் நுவலப்பட்டிருக்கின்றது. இன்னோரன்ன இரக்க மற்ற கொடுஞ்செயல்களைத் தவிர வேறு அருட் செயல் எதனையும் ஆரியர் செய்தனரென்பது அவர் பாடிய அவ் விருக்குவேதப் பாட்டுகளாற் சிறிதும் அறியக் கூடவில்லை. மற்று ஆசிரியர் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்த திருக்குறளிலோ,

66

"அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாந் தரும்"

என்றும்,

(குறள் 321)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/306&oldid=1593040" இலிருந்து மீள்விக்கப்பட்டது