உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மறைமலையம் - 31

“தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை”

(குறள் 327)

என்றும்,

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று’

(குறள் 259)

என்றும்,

“பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்றின்ப வர்க்கு”

(குறள் 252)

என்றுங் கொல்லாமை புலாலுண்ணாமை என்னும் அருளறம் வற்புறுத்தப்பட்டிருக்கின்றது.

இனி, இந்திரன் முதலான தேவர்களை ஆரியர் வேண்டிப் பாடிய பாட்டுகளிலுந், தமக்கு ஊணும், உறையுளும் உதவிய தமிழர்கள் செய்த நன்றியை மறந்து அவர்களை அழித்துவிடல் வேண்டுமென வேண்டும் புல்லிய வேண்டுகோண்மொழியுந், தமிழர்களுடைய நிலங் களும் ஆடுமாடுகளும் அரண்களும் பொன்னும் மணிக் கலன்களுமெல்லாந் தமக்கே வந்துவிடல் வேண்டுமென அத்தேவர்களை இரக்கும் இரப்புரைகளுமே நிரம்பிக் காணப்படுகின்றன.

66

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு'

وو

(குறள் - 110)

என்ற தமிழ்மறை கூறிய அறவுரையினை ஆரியரிடத்தும், அவர் பாடிய பழைய வேதப்பாட்டுகளிலும், ஆரிய நடையினை இஞ்ஞான்று தழீஇ நடக்குந் தனிக்குழுவினர் மாட்டும் ஒரு சிறிதுங் காண்டல் இயலாது. இவ்வாறு அருளொழுக்கமே சிறிதும் ல்லா ஆரியர்க்கும், அரு ளொழுக்கத்தினையே தமக்குயிராய்க் கொண்ட தமிழரின் தவவொழுக்கத்திற்குந் தாடர்பு காணப்புகுதல் கல்லில் நார் உரிக்கப் புகுதலுக்கே ஒப்பாகும்.

அற்றேல், வடமொழியில் ஆக்கப்பட்டிருக்கும் உபநிட தங்களுஞ், சாங்கியம் யோகம் முதலான விழுமிய நூல்களும் அருளையும் அறத்தையுந் தவத்தையும் மெய்யுணர்வினையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/307&oldid=1593041" இலிருந்து மீள்விக்கப்பட்டது