உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

283

அடுத்தடுத் தெடுத்து வற்புறுத்துரைத்தல் என்னையெனின்; அந் நூல்களெல்லாம் ஆரியரைத் திருத்தும்பொருட்டுத் தமிழாசிரியர்கள் வடமொழியில் ஆக்கி வைத்தனவே யன்றி அவை ஆரியராற் செய்யப்பட்டன அல்ல. இவ்வுண்மை எம் முடைய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலி லும், முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் நூலிலும், விரிவாக எடுத்து விளக்கப்பட்டிருத்தலின் அதனை அவற்றிற்

காண்க.

இனி, இல்லிருந்து இம்மையின்பந் துய்த்துவருகையி லேயே தவவொழுக்கத்தை மேற்கொண்டுவந்த பண்டைத் தமிழர், நிலையில்லா இம்மையின்ப நுகர்ச்சியை உவர்த்து வரவரக் கைவிட்டு, நிலையுள்ள மறுமையின்ப நுகர்ச்சி யினைப் பயக்குந் தவவொழுக்கத்திலேயே தம் வாழ்நாள் முடியுங் காறும் உறைத்து நிற்கலாயினர். இஃது ஆசிரியர் தொல்காப்பியனார், “காமஞ் சான்ற கடைக்கோட் காலை

66

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

-

-

-

ச்

என்றருளிச்செய்த நூற்பாவால் நன்கறியக்கிடக்கின்றது; சூத்திரப்பொருள் யாதோவெனிற் கூறுதும்; காமம் சான்ற கடைக்கோள்காலை இம்மையின்பம் நிரம்பத் துய்த்து முடிவுகொண்ட காலத்தில், ஏமம் சான்ற மக்களொடு துவன்றி தமக்குக் காவலாய் அமைந்த புதல்வருடன் பொருந்தி, அறம்புரி சுற்றமொடு தாஞ் செய்தல் தவிர்ந்த இல்லற வொழுக்கத்தை நடாத்துஞ் சுற்றத்தாருடன் கூடியிருந்து, கிழவனுங் கிழத்தியும் தலைவனுந் தலைவியும், சிறந்தது பயிற்றல் - வீட்டுநெறிக்கான தவத்தில் இடையறாது தம்மைப் பழக்குதல், இறந்ததன் பயன் - மேற் செய்துபோந்த இல்லறத்தின் பயன் ஆகும்; ஏ : அசை நிலை. “கனைப்பெருங் காம மீண்டு கடைக்கொள” எனக் குறுந்தொகையிலும் (99), “ஆடலுங் கோலமும் அணியுங்கடைக்கொள” எனச் சிலப்பதிகாரத் திலும் (6,74) வந்தாற் போற் ‘கடைக்கோள்' என்பது முடிவு என்னும் பொருளில் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/308&oldid=1593042" இலிருந்து மீள்விக்கப்பட்டது