உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் - 31

நேரே காணப்படும்

ச்சூத்திரப் பொருளால், தலைவனுந் தலைவியும் இம்மையின்பம் முற்றத் துய்த்து முடித்த தமது பிற்பருவத்தே தம்மக்களுஞ் சுற்றத்தாருந் தாஞ் செய்துபோந்த இல்லறவொழுக்கத்தை இனிது நடாத்திக் கொண்டு தமக்குந் தமது தவவொழுக்கத்திற்கும் உதவியாய் நிற்கத், தாந் தவப்பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டு நிற்ப ரென்பது தெளிவுறப் புலனாகின்றது. ஆகவே, மனைவி மக்கள் சுற்றத்தாரை விட்டுப்போய்த் தாந் தனியிருந்து நோற்கும் புத்த சமண துறவும், மாயாவாத வேதாந்தத் துறவும், அவரைப் பார்த்து மேற்கொண்ட சைவமடத் தலைவர் துறவும், அன்பும் அருளும் நிறைந்த நம் பண்டைத் தமிழ்ச்சான்றோர்க்கு பெற்றாம். பிள்ளைமைப் பருவம் முதற்கொண்டே தம்மோடு உடலும் உயிருமாய் அன்பு ழுகித் தம்மைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரையுந், தமது கட்டிளமைப் பருவந் தொட்டே கரும்புஞ்சுவையுமாய்த் தம்மைக் காதலித்துக் கண்ணுங்கருத்துமாய்த் தம்மைப் பாதுகாத்து மாணிக்கம் போல் மக்களைப் பெற்றுக்

உடம்பாடாகாமை

பூண்டெ

பழகிய

கொடுத்துத் தமக்குயிர்போற் சிறந்து உட ன் மனைவியரையும், பிற்பருவத்தே தமக்கோர் ஊன்றுகோலாய்த் தமக்கு எல்லாவகையிலும் உதவத்தக்க தம் புதல்வர்களையும், இவர்களின் தொடர்பால் தம்மாட்டு மெய்யன்பு பூண்டொழு குஞ் சுற்றத்தாரையும், பிள்ளைமைப் பருவந்தொட்டே தம்மோடுடன் பிறந்து உடன்வளர்ந்த தமையன் தம்பி தமக்கை தங்கைமாரையும் அன்பும் அருளும் இன்றிக் கைவிட்டு அவரெல்லாம் ஏங்கி யலற மனையகந் துறந்துபோய்ப், பிறரிடும் எச்சிற் சோற்றிற்கு ஏமாந்தலையுந் துறவுவாழ்க்கை சீசீ அறவே கடியற் பாலது! அறவே கடியற்பாலது! தமது தவ வாழ்க்கைக்கு வேண்டுவன வெல்லாங் குறைவற நல்கித், தமக்கு அன்புடன் பணிபுரியும் மனைவியும் மக்களுஞ் சுற்றத்தாருமெல்லாம் உவப்ப அவரிடையிருந்து, அவருந் தவவாழ்க்கையினை நாடுமாறு செய்து, தாமுந் தவவொழுக்கத்தை முட்டின்றி முடிக்கும் பண்டைத் தமிழரின் தவவாழ்க்கையே ஆ சாலச்சிறந்தது! சால வேண்டற்பாலது! தவவேந்தரான திருமூலநாயனார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/309&oldid=1593043" இலிருந்து மீள்விக்கப்பட்டது