உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

"நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”

என்றுந், தாயுமான அடிகள்,

66

'எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே, அல்லாது வேறொன் றறியேன் பராபரமே'

وو

285

என்றும் அருளிச் செய்தபடி, இறைவன் றிருவருளால் தமக்கு நெருங்கிய தொடர்பினராய் வந்து வாய்த்த பெற்றார் உற்றார் மனைவிமக்கள் முதலாயினார்க்கு முதலிலும், ஏனையோர்க்கு அதனை யடுத்தும் அன்பும் இன்பமும் பெருகச் செய்து, அவரை அல்லற்படாமல் ஐயன் திருவடித் தொண்டில் தம்மோடு உடன்உய்க்கும் நம் பண்டைத் தமிழ்ச்சான்றோரின் அருந்தவ வாழ்க்கையே விழுமிது! விழுமிது!

அங்ஙனமாயின், தம் உற்றார் உறவினரோ டுடனிருந்து துறவுநடத்தல் இயலுமோவெனின்; இயலு மென்பதற்கு அறுபத்துமூன்று நாயன்மாரிற் பெரும்பாலார் இல்லிருந்தே இறைவன் றிருவடித் தொண்டை ஒரு சிறிதும் வழுவாது நடாத்தி, மறுமையின்பத்தை முற்றப் பெற்றமையே உறு பெருஞ் சான்றாம். மேலும், இல்லந் துறந்தேகி இடர்ப்படுந் துறவிகள் பலருந் தாஞ்செய்த பிழையினை நெஞ்சந் திறந்து இஞ் ஞான்றுங் கூறுதல் கொண்டும், இஞ்ஞான்றைத் துறவு தவவொழுக்கமாகாமையும், இல்லிருந்து ஏதொரு குறையு மின்றித் துறவு நடாத்திய பண்டையோர் ஒழுகலாறே உண்மைத் தவவொழுக்க மாதலுந் தெளியப்படுமென்க.

வள்ளிடைமலைபோல்

இச்சூத்திரப் பொருள் ாருள் இவ்வாறு இனிது விளங்கிக் கிடப்பவும், இஞ்ஞான்றைத் தமிழறிஞர் ஒருவர், மக்களுஞ் சுற்றமுந் தம்மைப் புடைசூழ இருந்து மனையறம் நடத்தும் மாண்பினையே இச்சூத்திர மும் உணர்த்துகின்றதென ஆசிரியன் கருத்தொடு மாறு பட்டெ ாரு பொருந்தாவுரை கூறினார். கற்பியலின் துவக்கத் திருந்து ஐம்பது சூத்திரங்கள் வரையிற் றலைவனுந் தலைவியுந் திருமணஞ் செய்துகொண்டு வாழுங் கற்பொழுக் கத்தின் வகைகளை நன்கெடுத்துக் கூறியபின், அவ்வா றெல்லாம் நடைபெற்ற காதற் கற்பொழுக்க மனையறத்தின் பயன் மறுமையின்பம் நோக்கித் தவத்தின்கண் அமர்தலே யாம் என அறிவுறுத்துதலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/310&oldid=1593044" இலிருந்து மீள்விக்கப்பட்டது