உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் - 31

ஆசிரியன் கருத்தாகுமன்றிக், கூறியது கூறலாய் முன்சொன்ன கற்பொழுக்க மாட்சி யினையே கற்பியலின் முடிவிடத்தும் ஆசிரியன் கூறினா னென்றால் ஒரு சிறிதும் பொருந்தாதென்க. மறுமையின்பம் நோக்குந் தவவாழ்க்கையிற் றமக்கு நம்பிக்கை யின்மையாற் போலும், அவ்வறிஞர் கிணக்குவான் வேண்டி ஆசிரியன் கருத்தை மாற்றியுரைத்தார். ஆனால், ஆசிரியனோ மறுமை நோக்கிய தவவாழ்க்கையிலே நம்பிக்கை மிகவுடையனென்பது,

66

'காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே”

தமது

கருத்துக்

எனப் புறத்திணையியலில் யாக்கையும் இளமையுஞ் செல்வம் முதலியனவும் நிலையாமையின் வீடுபேறு நோக்கித் தவம் புரிதலை வற்புறுத்தங் காஞ்சித் திணையி னிலக்கணத்தை அவன் எடுத்தோதினமையாற் பெறப்படுதல் காண்க. எனவே, காதலொழுக்கம் முகிழ்த்தலர்ந்த களவொழுக்கங் கூறி, அதன்கட் காய்த்த கற்பொழுக்கம் அதன் பிற்கூறி, அக்கற் பொழுக்கத்திற் கனிந்த தவ வொழுக்கங் கடைப்பிடியாய்க் கூறலே ஆசிரியன்றன் உள்ளக்கிடையாதல் தெள்ளிதிற்

பெறப்படுமென்க.

அற்றேற், கற்பியலின் இறுதிச் சூத்திரமாய் நிற்கற் பாலதான “காமஞ் சான்ற” என்னுஞ் சூத்திரத்திற்குப் பின், "தோழி தாயே” என்றும், “வினைவயிற் பிரிந்தோன்” என்றும் வேறிரண்டு சூத்திரங்கள் இயைபின்றி நிற்றல் என்னையெனின்; அது பிற்காலத்தே ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையா மென்க. "தோழி தாயே என்னுஞ் சூத்திரம் வாயில்களாவார் இவர் என்றுணர்த்துகின்றது. இது வாயில்களினிலக்கணங் கூறுங் "கற்புங் காமும் நற்பா லொழுக்கமும்" என்னு பதினோராஞ் சூத்திரத்தை யடுத்து நிற்கற் பாலதாகும். "வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை" என்னுஞ் சூத்திரம் வேந்தன் ஏவிய வினைமேற் சென்றோன் அதனை முடித்துத் திரும்பி வருதலை யுணர்த்துவதாகும். இது வேந்தர்க் குற்றுழிப் பிரிதலை யுணர்த்தும் "வேந்துறு தொழிலே யாண்டின தகமே” என்னுஞ் சூத்திரத்தை யடுத்து நிற்கற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/311&oldid=1593045" இலிருந்து மீள்விக்கப்பட்டது