உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

.

297

துறையின்றி யெடுத்துத் தமிழிற் புகுத்தி அதனைப் பாழ்படுத்தி அவ்வாற்றால் தம்மை அப்பிறமொழியாளர்க்கு அடிமைப் படுத்திக் கொள்ளுதலுடன், அவ்வடிமை வாழ்க்கையையே தமக்கொரு பெருமை வாழ்க்கையாகவும் பிழைபட நினைந்து இறுமாந்து ஒழுகுகின்றனர். தன்னைப்பெற்ற தாயைக் கால்லுந் தறுகணன்போலத், தன்னை அறிவு பெற வளர்த்துப் பெருமைப்படுத்திய தமிழைச் சீர்குலைக்கும் போலித் தமிழ்ப் புலவரைப் பின்பற்றி நடவாமல் தமிழை யுள்ளன்புடன் ஓம்பித் தூய்தாய் வழங்கும் உண்மைத் தமிழாசிரியர்களைப் பின்பற்றி நடத்தலிற் றமிழ் நன் மாணவர் அனைவருங் கருத்தா யிருத்தல் வேண்டும். தமிழர் அனைவரும் பண்டுபோல் தமக்குந் தம் இல்லங்களுக்குந் தம்மூர்களுக்கும் பிறவற்றிற்கு மெல்லாந் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டுமன்றி, வடமொழி முதலான வேற்றுமொழிச் சொற்களைப் பெயர்களாக அமைத்தல் ஆகாது.

6

இன்னுந், தமிழரெல்லாருந் தம்மைத் தமிழரென்றே வழங்கக் கடமைப் பட்டிருக்கின்றனர். தம்மை ஆரியரென் றாவது, ஆரிய நூல்களில் வகுத்துச் சொல்லப்பட்ட‘பிராமணர்’ க்ஷத்திரியர்,' 'வைசியர்,’ ‘சூத்திரர்’ என்றாவது சொல்லிக் கொள்ளலாகாது. மேலும், இப்போது தம்மை ஆரியராகவுந், தமக்குரிய மொழி 'சமஸ்கிருதமே'யாகவும் பிழைபடக் கருதி மயங்கியிருக்கும் பார்ப்பனர் அனைவருந், தம்மவரல்லாத தமிழரெல்லாரையும் ‘வைப்பாட்டிமக்கள்' எனப் பொருள் தருஞ் ‘சூத்திரர்' என்னுஞ் சொல்லால் வழங்குவது மல்லாமல், தமிழரில் ஏழை எளியவர்களாயி ருப்பவர்களை ‘அடே' ‘அடி’ என்றும் இழித் தழைக்கின் றார்கள். இங்ஙனந் தம்மை இழிவுபடுத்தி வரும் பார்ப்பனர் எல்லாரையும், அவர்கள் உயர்ந்தவராயிருப் பினும் இழி தொழில் புரிபவராயிருப்பினும், அவர்களெல் லாரையுந் தமிழர் களோ 'சாமி சாமி' என்று மிகவுயர்ந்த சொல்லால் அழைக்கின்றார்கள். இனியேனுந், தமிழர் தமது மேன்மை யுணர்ந்து, தம்மை எவருஞ் சூத்திர ரென்னும் இழி சொல்லால் அழைக்கவுந், தம்மை ‘அடே' ‘அடி' என விளிக்கவுஞ் சிறிதும் இடந் தரலாகாது. “கீழோரா யினுந் தாழ உரை” என்னும் ஔவையாரின் பொன் மொழி யினைப் பார்ப்பனர்க்கும் பிறர்க்கும் எடுத்துச் சொல்லித்,

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/322&oldid=1593056" இலிருந்து மீள்விக்கப்பட்டது