உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

அ. தமிழர் தம்மை யறிந்தொழுகல்

வேண்டும்

முதலில் தமிழர் தம்மை இன்ன இனமென்று தெளிவாய் உணர்ந்து, அவ்வினத்தின் இயல்புஞ் செயலும் நல்லனவா யிருக்கக் கண்ட

ல்

அவற்றைத்

தழுவி நடத்தலிற் கடைப்பிடியாய் நிற்றல்வேண்டும்; அவையிற்றிற் சில நல்லனவா யில்லாவிட்டாலும், அல்லதவை எல்லாமுமே நல்லனவாய் இல்லாவிட்டாலும் அவையிற்றை யொழித்து, வேறு நல்லன கைக்கொண்டு நடத்தலிலும் முனைப்பா யிருத்தல் வேண்டும். இந்நூலின் துவக்கத்திற் காட்டி விளக்கியபடி, இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னமே, அஃதாவது ஆரியர் இவ்விந்திய நாட்டுள் நுழைதற்கு முன்னமே தமிழர்தம் முன்னோர் நாகரிகத்திற் சிறந்தாராயிருந்து, நாகரிகமில்லா ஆரியர்க்கு நாகரிக வாழ்க்கையினைக் கற்றுக் கொடுத்தாராத லால், அத்தகைய முன்னோரின் மரபில் வந்த தமிழர்கள் தமது பழம்பெரு மையை யுணர்ந்து அதற்கேற்ப நடத்தல் வேண்டும்.

தமிழ்முன்னோர் தமது தமிழ்மொழியைப் பிற மொழிக் கலப்பின்றித் தூயதாய் எல்லாவளனும் நிரம்ப வளர்த்து வழங்கி வந்தவாறுபோல, இஞ்ஞான்றைத் தமிழருந் தமிழ் மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும். ஒவ்வோரு மக்கட் குழுவினருந் தமது மொழியைத் தம்முயி ரினுஞ் சிறந்ததாக வைத்துப் பேணி வருகையில், இஞ்ஞான்றைத் தமிழர்மட்டுந் தமிழ்மொழி யுணர்ச்சி சிறிதுமில்லாக் கயவர் களாய் இருக்கின்றனர். அவருள் அத்திபூத்தாற்போற் றமிழ் கற்பார் சிலருந் தமது மொழிப் பெருமையை யுணராமல், இறந்துபோன வடமொழிச் சொற்கள் சொற்றொடர்கள் கதைகளையும், நேற்றுண்டான நாகரிகமில்லா மொழிகளின் சொற்கள் சொற் பொருள் வழக்குகளையும் ஒரு வரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/321&oldid=1593055" இலிருந்து மீள்விக்கப்பட்டது