உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

295

கொண்டு காற்றிலும் மழையிலும் பெரிதும் மழையிலும் பெரிதும் இடர்ப்பட்ட நம்மனோர் இப்போது பலதிறப்பட்ட கண்ணாடி விளக்குகளைப் பெற்று எவ்வளவு இன்புற்று வாழ்கின்றனர்! முன்னே, மெல்லச் செல்லுங் கட்டை வண்டிகளில் மிகவுந் துன்பம் உழந்து ஊர்ப் பயணஞ் சென்றவர்கள் இப்போது காற்றினுங் கடுகிச் செல்லும் நிலவூர்திகளிற் சென்று சிறந்த பல தேயக் காட்சிகளையும் எத்துணை இனிதாய்க் கண்டு இன்புற்று வருகின்றனர்! முன்னே பனையோடுளில் எழுதிவைத்த நூல்கள் எளிதிற் கிடைக்கப் பெறாமையால் கல்விமணம் வீசப் பெறாதிருந்தவர்கள் இப்போது அச்சுப் பொறிகளின் வாயிலாக வளிவரும் எத்தனையோ பல நூல்களை எளிதிலெய்தி எத்துணை அறிவுவிளக்கம் வாய்ந்து திகழ்கின்றனர்! இங்ஙனமே, இன்னும் நுண்ணிய ஆராய்ச்சி யறிவாற் கண்டறியப்படுங் கருவிகளையும், அவற்றால் விளையும் இன்பங்களையும் எடுத்துரைக்கப் புகுந்தால் இஃது அளவின்றி விரியும். ஆகவே, காலங்க டோறுந் தொடர்ந்து நிகழும் மாறுதல்களை நன்காராய்ந்து பார்த்து, அவற்றிற் கேற்ப நமது வாழ்க்கையின் பழைய நிலைகளை அறவேயொழித்தோ அல்லதவற்றுட் சீர்திருத்தற் பாலனவற்றைச் சீர்திருத்தியோ ஒழுகினாலன்றி மக்கள் வாழ்க்கை இனிது நடவாது. ஆதலால், இக்காலத்திற் கின்றியமையாத வேண்டப்படுஞ் சீர்திருத்தக் குறிப்புகளை இந்நூற்பொருள் துவக்கத்திலிருந்து செல்லும் முறையே வைத்து நுவல்வாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/320&oldid=1593054" இலிருந்து மீள்விக்கப்பட்டது