உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

இனிப்,

35. சீர்திருத்தக் குறிப்புகள்

“பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே'

99

என்ற மேலோருரைப்படி, காலம் ஊர்ந்து செல்லச் செல்லப் பழையவாய்ப் போன பொருள்களும் பொருட் பகுதிகளும் அழிந்து போதலும், புதியவாய்த் தோன்றும் பொருள்களும் பாருட்பகுதிகளும் மேன்மேற் கிளர்ந்

தழுதலும், வ்வுலகத்துயிருள் பொருள் உயிரில்பொருள் என்னும் இருவகைத் தொகுப்பின் பாலும் இடையறாது மாறி மாறி நிகழும் நிகழ்ச்சிகளா யிருக்கின்றன. இன்றைக்கு மேடாயிருக்கும் ஒருநிலப்பகுதி அந்நிலையழிந்து பின் னொரு நாள் பெரும் பள்ளமாய் மாறுகின்றது. அங்ஙனமே பள்ளமாயிருப்பது மேடாய்த் திரிபெய்துகின்றது. இன்னும், மரஞ்செடி காடிகளும் முன்னே தம்மாட்டிருந்த இலைகள் காய்ந்து சருகாய்ப்போக பின்னே புத்திளந்தழைகள் தழைத்துப் பூத்துக் காய்த்துப் பழங்களைத் தருகின்றன; ஆண்டு முதிர முதிர அவை முற்றுமே பட்டுப் போதலுங் காண்க. அங்ஙனமே, மக்களுள் முதிர்ந்தோரும் இறந் தொழிய அவர்தம் மகார் வளர்ந்து சிலகாலம் இளைஞராய் நுகர்வன நுகர்ந்து பின்னர் மாண்டுமறைந்து போகின்றனர்.

மேலுங், காலஞ் செல்லச் செல்ல மக்களுக்கு அறிவும் முயற்சியும் வரவரப் பெருகா நிற்கின்றது. அதனால் அவர் காலங்கடோறும் புதிய புதிய கருவிகளைப் படைத்துத் தமது வாழ்க்கையில் முன்னிருந்த அல்லல்களை யொழித்து மேன்மேல் இன்ப நுகர்ச்சியினைப் பெருகச் செய்து வருகின்றனர். முன்நாளில் அகல் விளக்குகளை வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/319&oldid=1593053" இலிருந்து மீள்விக்கப்பட்டது