உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

293

அடிநாவின் கண்ணும் நெற்றி நடுவிலும் வரவரச் சுடர்ந் தொளிராநின்ற அவ்வொளியினாலேயே தானும் மேன்மேல் விளக்கமுடையதாகி உச்சிக் கண்ணே சுரந்தொழுகும் எல்லாம் வல்ல சிவத்தின் கரைகடந்த பேரின்பப் பெருக்கிற் றிளைத்துப் போக்குவரவு அற்று நிற்கும் நிலையும் மெய்க்குரவனையடுத்து அவன் அறிவுறுத்த அறியற் L பாலனவாகும். எமது சைவசித்தாந்த ஞானபோதத்தின் இரண்டாம் பாகத்திற் ம் 'பிராணாயாமம்,' 'பத்தியோகம், 'சிவராசயோகம்' என்னும் விரிவுரை களிலும் இவ்வுண்மைகள் புறத்தார்க்குத் திறப்பாகச் சொல்லவேண்டு மளவுக்கு விளக்கிச் சொல்லப்பட்டிருக் கின்றன. என்றாலும், அகமுகமாகச் செய்யப்படும் இத்தவப் பயிற்சி நல்லாசிரியனை அடுத்து அவன் அறிவுறுத்தும் அறிவுரை வழிநின்று செய்யாவிடிற் பேரிடர் பயக்கு மாதலால், தவப்பயிற்சியில் வேட்கையுடைய நன்மாணவர் அதனை ஆசிரியன் நுவலும் உரைவழி நின்றே பயிறற் பாலார். அதுகாறுந் தவப்பயிற்சியின் கூறுபாடுகளையும் முறைகளையும் உணர்ந்தார் நூல்களில் ஐயந்திரிபறக் கற்றுவருதலே எல்லாருஞ் செய்தற்குரியதாம் என்பது.

அடிக்குறிப்புகள்

1.

Solar Plexus

2.

The Abdominal Brain

3.

4.

5.

6.

Read Dr. T.J. Hudson's “The Law of Mental Medicine”pp.195-205. Varieties of Religious Experience (Library edition of 1904, p.511.

Aura.

Clairvoyant vision.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/318&oldid=1593052" இலிருந்து மீள்விக்கப்பட்டது