உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

மறைமலையம் - 31

சென்றொளிர்ந்து அவனது டம்பு உயிர் உணர்வெல்லாந் தன் வண்ணமாக்கி விடும்; அவ்வாறு இறைவனது ஒளியுருவாய்த் திரி பெய்தினான் உடம்பு மாற்றற்ற பொன்போல் ஒளிவிட, அவனைக் காண்பாரெல்லாம் அவன்பாற் கருத்தழிந்து ஈர்க்கப்படுவர்; அத்தகைய அருந்தவத்தோனைக் கூற்றுவன் அணுகான். இவ்வியல்பினைத் தாமே நன்கு துய்த்துணர்ந்த மாணிக்க வாசகப்பெருமான்,

“புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையா யாண்ட ஈசனே மாசிலா மணியே,

துன்பமே பிறப்பே யிறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ, இன்பமே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே”

என்று கன்னெஞ்சமுங் கரைந்துருகப் பாடியருளிய வாற்றால், றைவன்றிருவரு ளொளியால் விழுங்கப்பட்டார் தம் உடம்புமுயிருமெல்லாம் அதன்வண்ணமாய் விளங் கும் நிலை இனி துணரப்படும். மாறி மாறி யியங்கும் நமது மூச்சை மூலத்தே அடக்கி வைக்கப் பழகிய அளவானே, இதற்கு முன் மூத்துப்போன வுடம்புந் திரும்ப இளமை எய்திப் பளிங்குபோல் விளங்கா நிற்கும்; இது தெய்வத்திரு மூலர்,

“வளியினை வாங்கி வயத்தில் அடக்கிற்

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந், தெளியக் குருவின் றிருவருள் பெற்றால்

வளியினும் வேட்டு வளியனு மாமே'

என்றருளிச் செய்தல் கொண்டு தெளியப்படும்.

இனி, இடதுமூக்கினு வலதுமூக்கினும் மாறிமாறி ஓடும் மூச்சினை மூலத்தின்கண்ணே அடக்கும் வகையும், அவ்வழியே உயிரின் உணர்வு அங்குத் திகழும் இறைவன தருளொளியிற் றோய்ந்து அதனுடன் உடம்பின் நடுநிற்கும் நரப்புக்குழாயினூடு மேலேறிக் கொப்பூழினும் நெஞ்சத் தாமரையினகத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/317&oldid=1593051" இலிருந்து மீள்விக்கப்பட்டது