உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

"எருவிடும் வாசல் இருவிரன் மேலே கருவிடும் வாசல் இருவிரற் கீழே

உருவிடு சோதியை யுள்கவல் லார்க்குக் கருவிடு சோதி கலந்துநின் றானே”

என்றருளிச்செய்தார்.

291

இன்னும், இம்மூலத்தின் கண்ணதான முக்கோண வரையே கடவுளும் உயிரும் புலனாய் விளங்கி ஒன்றுபடு தற்கான இடமாம் என்னும் மெய்ம்மையினை அமெரிக்கா தேயத்திற் புகழ் ஓங்கிய அறிவுநூல் ஆசிரியராய்த் திகழ்ந்த உவில்லியம் ஜேம்ஸ் என்னுந் துரைமகனாரும் பல் சமயப் பழக்கங்கள்" என்னுந் தமதரிய பெரிய நூலின்கண் நன்கெடுத்து விளக்கியிருக்கின்றார். ஆதலால், மூலத்தின்கட் புலனாய் விளங்கும் றைவனொளியுடன் உயிரின் உணர்வு ஒருங்கு தோய்ந்து, அதனை மேலெழுப்ப முயன்று முறுகி நினைந்த அளவானே, அவ்வொளி மூலத்தினின்றுந் தலையின் மூளை வரையிற் றொடர்ந்து நிற்கும் நரப்புக் குழாய் வழியே மேலேறித் தலையின் உச்சிக்கு மேலுஞ் சுடர்விரிந்து ஒளிராநிற்கும். அங்ஙனம் மூலத்து அரு ளொளியைத் தலையின் உச்சிக்கு மேலுஞ் சுடர்ந் தெரியச் செய்யும் முனிவனின் தவவுடம்பைச் சூழக் கண்ணையுங் கருத்தையுங் கவருங் கதிரொளி வட்டம்5 ஒன்று எந்நேரமுந் துலங்கிக்கொண்டே யிருத்தல், பொது மக்கள் எல்லார் கண்களுக்கும் புலனாகா விடினுந் தெளிவுக் காட்சியுடைய சிலர் தங் கண்களுக்கு நன்கு புலனாய்த் தோன்றுகின்றது. இவ்வாறு மூலத்து நிற்கும் அருளொளி யானது, உடம்பும் உயிரும் உணர்வும் நிறைந்து அவற்றைத் தன்னுருவாக்கி விடுமாறு சான்றோர் செய்யும் அரும்பெரு முயற்சியே தவமுயற்சியாம் என்றுணர்தல் வேண்டும்.

6

அற்றேற், கருத்தை மூலத்தொளியிற் பதித்தற்கு வழி யாதெனின்; அது, புறத்தே கழிந்துபோகும் நமது மூச்சை அடக்கிக், கருத்தை மூலத்தொளி முகமாய்த் திருப்பி டையறாது பழகிவருதலே யாகும்; அங்ஙனம் இடையறாது பழகிவரும் அருந்தவனுக்கு மூலத்தொளியில் உணர்வுமுற்றுந் தோய்ந்துவிடும்; அங்ஙனம் தோய்ந்த அளவானே அவ்வொளி உடம்பின் நடுநரம்பின் புழை யூடெழுந்து, தலைக்குமேலுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/316&oldid=1593050" இலிருந்து மீள்விக்கப்பட்டது