உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மறைமலையம் - 31

தலையில் மூளையினிடத்தே பல்கதிர் விரித்துத் துலங்கு தலாலன்றோ, நமதுணர்வு அதனால் விளக்கம் அடைந்து கண் நாக்கு மூக்கு செவி மெய் என்னும் ஐம்பொறிகளின் வாயிலாகப் புறப்பொருட் டன்மைகளை யுணர்ந்து அறிவும் இன்பமும் மேன்மேல் அடைவதாகின்றது?

மண்டையி னகத்தேயுள்ள யி னகத்தேயுள்ள மூளையானது, புறத்தே காணப்படும் பருப்பொருட்டன்மைகளை யுணர்ந்து, அவற்றின்வழியே நுண்ணறிவு சிறிது சிறிதாகக் கூடி, ஏனை மிக நுண்ணிய பொருள்களான கடவுள் உயிர் முதலிய வற்றின் றன்மைகளை நாம் உய்த்தறிதற் கருவியாய்ப் பயன்பட்டு வருகின்றது. மற்றுக், கருவாயில் எருவாயில் கட்கு இடையேயுள்ள மூலத்தின் கண்ணுள்ள மூளையோ, மெய்வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளின் உணர்வுக்கும் எட்டாத நுண்பொருள் இயல்புகளையும் அப் பொருள் நிகழ்ச்சிகளையும் பிற கருவிகளின் உதவி வேண்டாது நேரே நாங் காண்டற்குதவி செய்கின்றது. ஒருவர் நினைக்கும் நினைவுகளை அவர் நமக்குச் சொல்லக் கேட்டாலன்றி நாம் அவற்றை நேரே அறிதல் இப்போது சிறிதும் இயலவில்லை. மற்று மூலத்துள்ள அடிமூளையைப் பயன்படுத்தத் தெரிந்த வர்களுக்கோ, அண்மையிலுள்ளார் நினைக்கும் நினைவு களையுஞ் சேய்மையிலுள்ளார் நினைக்கும் நினைவுகளையும், மறுமையுலகிற் சென்றார் நினைக்கும் நினைவுகளையும், அவரும் பிறருந் தெரிவிக்க வேண்டாமலே ஒரு நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ளும் ஆற்றல் தானே யுண்டா கின்றது. அங்ஙனமே, மேலையுலகங்களின் நிகழ்ச்சிகளுங், கடவுளின் நிலை உயிர்களின் நிலைகளும் அத்தகையோர் கண்களுக்கு எளிதிற் புலனாய்த் தோன்றி விடுகின்றன. இன்னோரன்ன ஆற்றல்கள் மூலத் துள்ள அடி மூளையில் அமைந்து கிடத்தல் கண்டு இதற்குக் 'கதிரொளி முடிச்சு என்றும் ‘அடிவயிற்று மூளை ள என்றும் வெள்ளைக்கார ஆசிரியர் பெயர் அமைத்திருக் கின்றார்கள். நம் தெய்வத் திருமூலரும், நமதுடம்பின் மூலத்துள்ள முக்கோண வரையிற் புலனாய் விளங்கும் றைவனதொளியுருவினை அகக் கண்ணால் நோக்கியுருக வல்லார்க்கு இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலை வாய்க்குமெனத் தெரிப்பார்,

2

3

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/315&oldid=1593049" இலிருந்து மீள்விக்கப்பட்டது