உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

289

மூத்து இவ்வுடம்பையும் இழந்து கூற்றுவனுக் கிரையாய் ஒழிவர், இவ்வுண்மை தேற்றுதற்கே ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்,

“வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டியற் பால பல

என்றும்,

"நெஞ்சிற் றுறவார் துறந்தாற்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்"

என்றுங்,

66

"கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு'

و,

(குறள் - 342)

(குறள் - 276)

(குறள் - 269)

என்றும் அருளிச் செய்தார். அற்றேல்ஃதாக, பண்டை யோர் கண்ட தவமுயற்சியைச் சிறிது விளக்குகவெனின்; விளக்கு தும். இறைவன் ஒளியுருவினனாய் எல்லா உயிர் களின் அகத்தும் புறத்தும் என்றும் விளங்கியபடியாய்த் திகழ் கின்றனனென்னும் உண்மையினை மேலே விரித்து விளக்கிப் போந்தாம். அவனது ஒளியுருவினை நமது புறக் கண்ணாற் புறத்தே மட்டுங் கண்டுவருகின்றனமன்றி, மற்று அதனை நமதகக் கண்ணால் நமதகத்தேயுங் கண்டு வருகின்றனம் இல்லையே. இனிப்,புறத்தே அவன தொளியுரு வினைத் தெளியக் காணுமாப்போல், அகத்தேயும் அதனைத் தெளிவுறக் காண்டற்குச் செய்யும் முயற்சியே தவப்பயிற்சி யாகுமென் றுணர்தல் வேண்டும்.

இனி, இறைவனதொளி புறத்தே பகலவன் மண்டிலங்கள் பலவற்றின் வாயிலாக விளங்கித் திகழ்தல்போல அது நமதுடம்பினகத்தேயும் ஆறிடங்களில் விளங்கித திகழா நிற்கின்றது. அவ்வாறு இட டங்களாவன: எருவாய், கருவாய், கொப்பூழ், நெஞ்சம், அடிநா, நெற்றி என்பனவாகும். இவற்றுள், எருவாய் கருவாய்க்கு நடுவே முக்கோண வடி வாயுள்ள இடத்தின் கண்ணேதான் இறைவன் தருளொளி விளங்கத் துவங்கி, அதற்கு மேலுள்ள ஏனை ஐந்து வட்டங் களையும் ஊடுருவிக்கொண்டு மேற்சென்று தலையினுள் ளமைந்த மூளையில் அஃது ஆயிர இதழ்த் தாமரைபோற் கதிரொளி விரித்துத் துலங்கா நிற்கின்றது. இங்ஙனமாக இறைவனதொளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/314&oldid=1593048" இலிருந்து மீள்விக்கப்பட்டது