உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

34. தவப்பயிற்சி

மேலே விளக்கியவாறு பண்டைத் தமிழ்ச் சான்றோர் இம்மை வாழ்க்கையும், அதன்கண் நுகரும் இன்பமும், மறுமை வாழ்க்கையினையும் அதன்கண் நுகரும் பெயராப் பேரின்பத் தினையும் உயிர்கள் அடைதற்கு முதற்சுவையாய்ச் சிலகால் நிற்பதன்றி, மறுமையின்ப வாழ்க்கையைப் போல் நிலையாய் இருப்பன அல்லவென் றுணர்ந்து, இம்மை யின்பந் துய்த்து வரும் இளமைப் பருவத்திலேயே சிறிது சிறதாத் தவமுயற்சி யிலும் புகுந்து, இளமை கழிந்தபின் உலகியன் முயற்சிகளை அறவே யொழித்துத் தவப்பயிற்சி யிலேயே நிலைபெற்று நிற்கலாயினர். அதனால் அவர்கள் முதுமைப் பருவத்தும் ளமைத் தன்மை வாய்ந்தவர்களாய், நரை திரை மூப்புப் பிணியின்றி நூறாண்டும் நூறாண்டுக்கு மேலும் நீண்ட காலம் உயிர் வாழ்ந்து வந்தனர். பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான் தமது முதுமைப் பருவத்திற் கோப்பெருஞ் சோழன் என்னுந் தன் ஆருயிர் நண்பனைக் காணப் போன காலத்தில், ஆண்டில் மிக முதியராயிருந்தும் அவர் வடிவில் மிக ளைஞராய்த் தோன்றிய வியப்பினை எமது முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் நூலில் விரிவாக எடுத்து விளக்கியிருக்கின்றேம். அதுகொண்டு, இம்மை வாழ்க்கை யினையும் அதன்கண் நுகரும் இன்பத் தினையும் அவற்றோடு ஊடுருவி நிகழுந் தவவுணர்வுந் தவமுயற்சியு மாகிய மருந்து ஊட்டி மிக நீளச் செய்து கொள்ளும் நுண்ணிய முறையினை நம் பழந்தமிழாசிரியர் நன்கறிந் திருந்தமை தெளியப்படுதல்

காண்க.

தவவுணர்வுந் தவமுயற்சியுமின்றி இம்மை வாழ்க் கையை நடாத்துவோர், இம்மையின்பத்தையே இனிது நுகரமாட் டாமையோடு; இளமை கழியும் முன்னமே பிணி வாய்ப்பட்டு

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/313&oldid=1593047" இலிருந்து மீள்விக்கப்பட்டது