உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

ஈ. மறுமைவாழ்விற் கருத்து

இனி, இம்மை வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கையிலேயே தன் நிலையாமையும், இது மறுமை வாழ்க்கைக்கு வாயி லாதலும் உணர்ந்து, இம்மை மறுமையை வகுத்து எல்லா வுயிர்கட்கும் உயிராய்த் துணைநின்று உதவிவரும் எல்லாம் வல்ல இறைவனை எந்நேரமும் மனக்கசிவுடன் நினைந்து வருதல் வேண்டும்.

“இருக்கினும் நிற்கும் போதும் இருந்துகண் துயிலும் போதும்

பொருக்கென நடக்கும் போதும் பொருந்தும்ஊண் துய்க்கும் போதும் முருக்கிதழ்க் கனிவா யாரை முயங்கிநெஞ் சழியும் போதுந் திருக்களா வுடைய நம்பா சிந்தையுன் பால தாமே”

ஒரு

என்ற அதிவீரராமபாண்டிய ருரையினை எண்ணிப் பார்க்குங் கால், அரசவாழ்க்கையிலிருந்த அப்பெருந்தகைக்கே எக் காலுஞ் சிவபிரான் றிருவடிக்கண் அயரா அன்பு இருந்தாற் போல, ஏனைமக்கள் எல்லார்க்கும் இவ்வுலக வாழ்வில் அறிவும் முயற்சியும் நிகழ்கையிலேயே இறைவன்பாலும் தொடர்பான அன்பு நிகழப் பெறுதல் இயல்வதே யாமென்பது தெற்றென விளங்கா நிற்கும். இவ்வுலக வாழ்வு முழுதுமே இறைவனருளால் நடைபெறுவதென உணர்ந்து ணர்ந்து உருகி வருதலே அனைவருஞ் செயற்பாலது. இங்ஙனம் நினைந்துருக வல்லார்க்கு இம்மையும் மறுமையும் இரண்டல்லவாய் ஒன்றேயாய் உறுதி பயத்தல் திண்ணம்.

இன்னும், முழுமுதற்கடவுள் ஒன்றே யன்றிப் பல இல்லை என்னும் உறுதியில் ஒருசிறிதும் நெகிழலாகாது. அம்முழு முதலும் ஒளிவடிவாய் என்றும் எவ்விடத்தும் எல்லாவுயிர் களின் அகத்தும் புறத்தும் விளங்கியபடியாய் நிற்கும் நிலையினைக் கருத்தூன்றி நினைந்துவரல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/327&oldid=1593062" இலிருந்து மீள்விக்கப்பட்டது