உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

303

மக்களாவார் தம்போன்ற மக்கள் வடிவில் வைத்தே முழு முதற் கடவுளை வாழ்த்தவும் வணங்கவும் விழைவு மீதூர்ந்து நிற்றலால், ஒளிவடிவிற் காணப்படுஞ் சிவந்த நிறமே அப்பன் வடிவென்றும், அதிற் காணப்படும் நீலநிறமே அம்மைவடி வென்றும் உணர்ந்து, அவையிரண்டும் பிரிவின்றி ஒருங்கு விரவி நிற்கும் அம்மையப்பர் உருவிலே கருத்தைப் பதிய வைத்து, அதனையே எக்காலும் வாழ்த்தியும் வணங்கியும் வருதல் வேண்டும்.

இங்ஙனஞ் சிவபிரானையும் அம்மையையுமேயன்றி, அவரின் வேறாகாமல் அவர்தம் புதல்வராகக் கருதப்படும் முருகவேளையும் யானைமுகப் பிரானையும், அம்மையின் நீலவுருவே வாய்ந்து அவளின் வேறாகாத திருமாலையும் முழுமுதற் கடவுளுக்கு அடுத்தபடியில் வைத்து வணங்குதல் இழுக்கன்று. இத்திருவுருவங்களைத் தவிர, நம்போற் பிறப்பு இறப்புகளிற் கிடந்துழன்ற சிறுதெய்வங்களையுங் கண்ணன் இராமன் முதலான அரசர்களையுங் கடவுள் நிலையில் வைத்து வழிபடுதல் மன்னிக்கப்படாத பெருங்குற்றமாய் முடியும்.

“சென்றுநாஞ் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோஞ் சிவபொருமான் றிருவடியே சேரப் பெற்றோம்"

என்றும்,

وو

“உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா தெங்கள் உத்தமனே” என்றும், நம் சமயாசிரியர் அறிவுறுத்திய மெய்யுரைகளைத் தமிழராவார் அனைவருங் கடைப்பிடித்தொழுகல் வேண்டும்.

ன்னுஞ், சிறுதேவதை வணக்கத்தைச் செலுத்தும் வரையில் அறிவற்ற கீழ்மக்கள் உயிர்க் கொலையும் ஊனுணவு மாகிய கொடுந் தீவினைகளைக் கைவிட மாட்டார். ஆதலாற், றமிழரில் மேன்மக்களா யிருப்பா ரெல்லாம் அல்லும் பகலும் இடையறாது முயன்று சிறு தேவதை வணக்கத்தை யும் உயிர்க்கொலை ஊனுண வையும் அறவே யொழித்து விடல் வேண்டும். இதனினுஞ் சிறந்த அறமுஞ் சிறந்த தெய்வக் கொள்கையும் வேறில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/328&oldid=1593063" இலிருந்து மீள்விக்கப்பட்டது