உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

உ திருக்கோயிற் சிறப்பு

இனி, அல்லல் மிகுந்த இம்மக்களின் சிறு வாழ்நாளில், அவர்தம் நினைவைப் பலவாறு சிதற அடித்துப் பல தீய தகாத வழிகளிற் செலுத்தும் பொருள்களும் இழிஞருமே எங்கும் நிறைந்திருத்தலால், அவர் தமக்கு நல்லெண்ணத் தையும் நல்நினைவினையும் இடை யிடையே வருவிக்கத் தக்க உயர்ந்த பொருளுஞ் சிறந்த அறிஞரும் ஊடே ஊடே இல்லாவிட்டால், மாந்தரிற் பெரும்பாலார் தீவினைகளிற் பெருகிப் பாவப் படுகுழியில் வீழ்ந்து விரைவில் மாய்ந்து போவரென்பது திண்ணமன்றோ? மக்களின் இம்மன நிலையினை நன்குணர்ந்தே நஞ் செந்தமிழ்ச் சான்றோர், எல்லார் செய்யும் நல்வினை தீவினைகளையும் அருகிருந்து கண்டு, அவ்வினைகளுக்குத் தக்கபடி இன்பதுன்பங்களை வகுப்பானான இறைவன் ஒருவன், அவரெல்லார்க்கும் மேற்பட்ட அறிவும் ஆற்றலும் உடையனாய் என்றும் எவ்விடத்தும் நந்தா மணிவிளக்காய் விளங்கிக் கொண்டிருக் கின்றனன் என்னுமுண்மையினை எல்லார்க்கும் எளிதில் நினைவின்கண் வருவித்தற்கு ஒப்பற்ற கருவிகளாகவே திருக்கோயில்களைத் தொன்றுதொட்டுத் தமிழ்மக்கள் உயிர்வாழ்ந்த இவ்விந்திய நாடெங்கணும், அவர் போய்க் குடியேறிய எகுபதி சாலடி மெகுசிகம் பேரு முதலான மிகப் பழைய நாடுகளெங்கணும் அமைத்து வைக்கலாயினர். இத் திருக்கோயில்களை மிகச் சிறிய அளவிலிருந்து மிகப்பெரிய அளவினவாகப் பழந்தமிழ்ப் பெருமக்கள் ஆங்காங்கு நோக்குங்கால், அவர்கள் அவற்றிற்காக எவ்வளவு அறிவாராய்ச்சி செய்து எவ்வளவு அரும்பாடுபட்டுக் கோடி கோடியாக எவ்வளவு பொருளைச் செலவு செய்து அவற்றை நூறாயிரக்கணக்காய் இந்நிலவுலகின் நடுப்பகுதி நெடுக அமைத்து வைத்திருக்க வேண்டுமென்பது

அமைத்துவைத்திருத்தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/329&oldid=1593064" இலிருந்து மீள்விக்கப்பட்டது