உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

305

தெற்றெனப் புலனாகா நிற்கின்றது. இறைவன் சிறியதிற் சிறியதான சிற்றணுவிலும், பெரியதிற் பெரியவான வான் மண்டிலங்களிலும் விளங்கும் இயல் பினை நினைவிற் பதித்தல் வேண்டியே, சிறிய கோயில்களும் பெரிய கோயில்களும் ஆங்காங்கு அமைக்கப்படலாயின. மிகப்பெரிய கோயிலமைப்பு களை நோக்குங்கால், மக்களின் நினைவானது இறைவனது மிகப்பெரிய நிலையினை யுணர்ந்து தன்னை யறியாத ஒரு பெருமகிழ்ச்சியும் வியப்பும் அடைந்து தானும் விரிந்தகன்று விளங்கா நிற்கின்றதென ஆசிரியர் உவில்லியம் ஜேம்ஸ் இதனுண்மையினை உள்ள வாறெடுத்து மொழிந்திருக்கின்றார். 'ஆதலாற், கோயில் களின் அமைப்பு, தன்னைக் காணும் போதெல்லாம் மக்களுக்கு இறைவனைப் பற்றிய எண்ணங்களை எழுப்பி, அவரதுள்ளத்தைத் தூய்மை செய்து, அவரது நினைவு இறைவனியல்பிற் சிறிது நேரமேனுந் தோய்ந்திருக்க உதவி புரிதலால், திருக்கோயில்களைவிட மக்களுயிர்க்கு உறுதி பயக்கவல்லது வேறேதும் இல்லையெனக் கடைப்பிடித் துணர்ந்து கொள்க.

சிவபிரான்

திருக்கோயில்களுந்

திருமால் திருக் கோயில்களும் இந்நாளில் வடநாட்டைவிடத் தென்னாட் டின் கண்ணேதான் மிகுதியாய் இருக்கின்றன. அக்கோயில் களிலுள்ள திருவுருவங்களை வழிபடுமுறைகளும் வட நாட்டை விடத் தன்னாட்டின்கண்ணேதான் சிறந்தன வாய் நடைபெறுகின்றன. வடநாட்டுக் கோயில்களில் உள்ள திருவுருவங்களை வணங்கச் செல்லும் மக்கள் தாமே அவற்றிற்கு நீரும் பூவும் இட்டு வணங்குகிறார்கள்; கூட்டம் மிகுதியாய் இருக்குங் காலங்களில் ஒருவரோடொருவர் இடித்துக்கொண்டு மிகவுந் தொல்லைப்படுகிறார்கள்; கூட்டத்தில் முரடர்களின் தொகையே மிகுதி; அதனால், அமைதியானவர்கள் அக் கூட்டத்திற்குப் புறம்பே நெடு நேரங் காத்திருந்து, பிறகு அத்திருவுருவங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டியவர்களாய் ருக்கின்றார்கள். மற்றுத் தென்னாட்டுக் கோயில்களிலோ, வழிபாடு நடத்துங் குருக்கள் மார் நாடோறுந் திருவுருவங் களுக்குத் திரு முழுக்குச் செய்து, ஆடை அணிகலன்கள் மலர்மாலைகள் சாத்தி, வணங்க வருவார் கூட்டம் எவ்வளவு மிகுதியா யிருப்பினும் அவர்களைத் திருவுருவத்தின் அருகே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/330&oldid=1593065" இலிருந்து மீள்விக்கப்பட்டது