உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

மறைமலையம் - 31

நெருங்க விடாமல் அகல நிறுத்தி, அவர்களுக்காகத் தாமே வழிபாடு நடாத்தி, அவர்கட்குத் திருநீறு குங்குமம் முதலியன அளித்து, அவர்கள் வெளிச் செல்ல விடுகிறார்கள். இத் தென்னாட்டு முறை வணங்கச் செல்லும் மாந்தர்க்கு எவ்வளவோ நலந் தருவதாய்க் காணப்படுகின்றது, அன்பர்கள் புறத்தே இறைவன் திருவுருவினை அகன்றிருந்து கண்டு களிப்ப துடன், செயலற்றுத் தமது நினைவை அகத்தே திருப்பி அங்கும் இறைவனது ஒளியுருவினை அமைதியாய்க் கண்டு இன்புற்றிருத் தற்கும் அஃது இடஞ் செய்கின்றது. ஆதலால், இத்தென்னாட்டு முறையினைச் சிறிதும் மாற்றாமல், இன்னும் அதனைச் சிறப்புற நடப்பித்தலே வேண்டற்பாலது.

1.

ஞ்

அடிக்குறிப்பு

Prof. W. James 'Varieties of Religious Experience' pp.459-462.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/331&oldid=1593066" இலிருந்து மீள்விக்கப்பட்டது