உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307

ஊ. திருக்கோயிற் காணிக்கைகள்

இனி, இத்தென்னாட்டின்கண் உள்ள நன்மக்கள் திருக்கோயிற் றிருவுருவங்களுக்கு ஏராளமான விலையுயர்ந்த அணிகலன்களுந், திருவுருவ வழிபாட்டிற்கு அளவிறந்த காணிக்கைகளும் பொருட்டிரளுங் காணிக்கைகளாகப் பண்டு தொட்டுக் கொடுத்த வந்திருக்கிறார்கள், இன்னுங் கொடுத்தே வருகிறார்கள். தாம் மிகச் சிறந்தனவாகக் கருதும் பொருள்களைத், தம்மாற் பேரன்பு பாராட்டப்பட்டார்க்கு மனம் உவந்து வழங்குதல் மக்களுக்கு ஒரு சிறந்த இயற்கை யாகவே யிருக்கின்றது.

L

ஆனாற், கோயிலுக்கு இங்ஙனம் பெரும்பொருள் வழங்குதல் அறிவில்லாத மடையர் செயலென்று புதுச் சீர்திருத்தக்காரர் சிலர் இஞ்ஞான்று கூறி வருகின்றார்கள். கோயிலுக்கு வழங்குவது உண்மையில் வீணாகுமா? எத்தனை கோடிக்கணக்கான பொன்னை நாடோறுஞ் செலவு செய்து, எத்தனை கோடிக்கணக்கான ஆடு மாடு கோழி பன்றி முதலான உயிர்களை ஊன் உணவிற்காகக் கொன்று நம் இந்திய மக்கள் பணத்தைப் பாழாக்குவதுடன் பாவத்தையுந் தேடிக் கொள்ளுகிறார்களே! இதனைப் புதுச்சீர் திருத்தக்காரர் கருதிப் பார்ப்பதுண்டா? இன்னும் ஏழையெளியவர் உரிமைகளைக் கவர்ந்துகொள்ளவுங், கடன்தந்து உதவின பொருளைத் தராது விழுங்கிவிடவுங், கொலை களவு காமங் கட்குடி சூது முதலான குற்றங்களைச் செய்யவுஞ் செய்த குற்றங்களை அழிவழக்காடி மறைத்து விடவும் எத்தனை கோடிக்கணக்கான பொருள் நம்மிந்துமக்களாற் செலவு செய்யப்படுகின்றன! இதனைப் புதுச் சீர்திருத்தக்காரர் கருதிப் பார்ப்பதுண்டா? இன்னும் இப்போதும் இதற்கு முன்னும் நடைபெற்று வரும் நடைபெற்று வந்த மேனாட்டரசர்தம் பெரும் போரிற் செலவான பொருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/332&oldid=1593067" இலிருந்து மீள்விக்கப்பட்டது