உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

மறைமலையம் - 31

குவியலுக்கும் மடிந்துபோன மக்கள் உயிர் விலங்கினுயிர்க்கும் ஒரு கணக்குண்டோ! இதனை யாவது புதுச் சீர்திருத்தக்காரர் கருதிப் பார்ப்பதுண்டா? இத்தீய நெறிகளிற் செலவாய்ப் போன பெரும்பொருட் குவியலை மீளக் காணல் முடியுமா? சிறிதும் முடியாதே! மற்று, நந்திருக்கோயில்களுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொருள்களுந், திருக்கோயில் வழிபாட்டிற் கென்று விடப்பட்ட நிலங்களுமோ அங்ஙனம் அழிந்து போயினவா? இல்லை, இல்லை. திருக்கோயிற் பொருள்கள் நிலங்களை இக்காலத்திற் கேற்ற சமயக்கல்வி தொழிற்கல்வி களிற் பயன்படுத்த அரசியலார் முனைந்தால், அவை பெரிதும் பயன்படுதற்கிசைந்த நிலையிலேயே இன்னும் ன்னும் அழியா திருக்கின்றன.

ன.சமய

மேலும், பழையநாளிற் கோயில்களுக்கு வழங்கப் பட்ட பொருள்கள் வழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டன அல்ல. அவற்றுள் ஒரு பெரும்பகுதி சமயநூற் கல்விக்கும், பல் சமயக் கொள்கைகளை வழக்கிட்டு விளக்கும் ஆசிரியர்க்கும் பயன்படுத்தப்பட்டன. சமய நூலாராய்ச்சி செய்து அவற்றின் பொருளைப் பிறர்க் கெடுத்து விளக்கும் ஆசிரியர்க்கென்று ‘பட்டிமண்டபம்' எனப் பெயரிய தொன்று ஒவ்வொரு பெரிய திருக் கோயிலிலும் அஞ்ஞான்று அமைக்கப்பட்டிருந்தமை மணிமேகலை, திருவாசகம் முதலான பழைய நூல்களால் னிதறியப் படுகின்றது.

இன்னுந், திருக்கோயில்களில் இறைவனைத் தொழ வரும் ஏழையடியார்களுக்குந் தொண்டர்களுக்கும் அறச் சோறு அளித்தற்பொருட்டுப், பேரளவினவான நெய்ப் பொங்கல் அக்கார அடிசில் வடை பாயசம் முதலியனவும் இறைவனுக்குப் படைக்கப்பட்டு வருதலும் பலரும் அறிந்தனவேயாம்.

மேற்கூறிய சிறந்த அறங்களும் பிறவுந் திருக்கோயில் களின் வாயிலாக நந்தமிழ்மக்கள் நன்கு செய்துவந்திருக் கவும், அரசியல் மாற்றத்தாலுஞ் செவ்வனே மேற்பார்ப்பவர் இல்லாதொழிந்தமையாலும் வை யெல்லாம் இந்நாளில்

நடைபெறா தொழிந்துவிட்டன. தமிழ் மக்கட்கே யுரிய சிவபிரான் திருக்கோயில்களிலுந் திருமால் திருக்கோயில் களிலும், ஆரிய நடையைத் தழுவிய பார்ப்பனர் புகுந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/333&oldid=1593068" இலிருந்து மீள்விக்கப்பட்டது