உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

௭. வழிபாடு நடத்தும் வகை

இன்னுந், நந் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் றைவனுக்கு வழிபாடு ஆற்றுங் காலங்களில் ஓதுதற்குத் தேவார திருவாசகங்களும், நாலாயிரப் பிரபந்தங்களும் இருக்கின்றன. இவ்வருள் நூல்களால் நுவலப்படுந் திருக்கோயில்களுக்கே எல்லாச் சிறப்புந் தெய்வத் தன்மையும் உளவன்றி, ஏனையவற்றிற்கு அவை இல்லாமை நம் இந்து மக்கள் எல்லாரும் இனிதுணர்ந்த ஒரு பேருண்மையாகும். இவ்வாறிருந்தும், இறைவனுக்கு வழிபாடு புரியுங் காலங்களில், எவரோ தெய்வத்தன்மை இல்லாத சிலரால் வரைந்து வைக்கப்பட்டனவும் வணங்கும் மக்கட்கு விளங்காதனவும் ஆன வடமொழிச் சொற்கள் சொற்றொடர்களைச் சொல்லிக் கோயிற்குருக்கள்மார் இந்நாளில் வழிபாடு புரிகின்றார்கள். கடவுளை நேரே கண்டு, அவனருளாற் பல செயற்கருந் தெய்வ நிகழ்ச்சிகளைச் செய்துகாட்டி, இறைவனருளை நாம் எளிதிற் பெறுமாறு செய்த அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலான தெய்வ அருளாசிரியர்களும், பொய்கையாழ்வார், பேயாழ்வார் முதலான உண்மையடியார்களும் அருளிச் செய்த தமிழ்ச் செம்பாடல்களே நம் நெஞ்சை நெகிழ்த்தி நம்மை இறைவன் பால் உய்க்குமன்றி, அருள் பெறாத ஏனோர் வடமொழியில் ஆக்கிய உரைகள் நம்மை இறைவன்றன் பேரளுக்கு உரியராக்க மாட்டா. ஆதலால், இனியேனநு நந் தமிழ் மக்கள் ஏமாந்து கிடவாமல், தேவார திருவாசகம் முதலான செந்தமிழ் மாமறைகளை எல்லாரும் அறிய நெஞ்சம் நெக்குருக ஓதி இறைவற்கு வழிபாடு ஆற்றுமாறு உடனே செய்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/335&oldid=1593070" இலிருந்து மீள்விக்கப்பட்டது