உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

311

ஏ. கோயில்மடங்களின் பொருளைப்

பாதுகாத்துப் பயன்படுத்தும் வழி

இனித், திருக்கோயில்கள் திருமடங்கள் முதலியவற் றிற்குத் தொன்றுதொட்டு அரசர்களாலுஞ், செல்வர் களாலும், பொதுமக்களாலுங் காணிக்கையாக அளிக்கப் பட்டுள்ள பொருளுங் காணிகளுந், திருக்கோயில் வழிபாட்டுக்கு மட்டுமே யன்றி அவற்றை அவ்வப்போது புதுப்பித்து வருதற்கும் அவற்றின் வாயிலாகச் சமயக் கல்வி வளர்த்தற்கும் அடியார்க்கு அறச்சோறு தருதற்கும் இன்னு ன்னும் பல நன்மைகளைப் புரிதற்குமே கொடுக்கப்பட்டவையாகும். ஆனால், இவற்றைச் செவ்வனே நடப்பித்தற்குத் தலைவர் களாகத் தேர்ந்து வைக்கப்பட்டவர்களோ, தம்மிடம் ஒப்பு விக்கப்பட்ட அவற்றின் உடைமைகளைப் பொதுமக்கள் பொருளென்று கருதாமலும், அவ்வுடைமைகளைக் கொண்டு நடத்தவேண்டிய அறங்களை நடத்தாமலும், அவைதம்மைத் தம்முடையவைகளாகவே கருதியுந் தாஞ் செய்யுந் தீயசெயல்களுக்கே அவற்றைச் செலவாக்கியும் வருதல் எவரும் அறிந்தனவேயாம். இவ்வட்டூழியங்களைச் சீர்திருத்தும் பொருட்டு அரசியலார் சார்பிற் சில ஆண்டு களாக அமைக்கப்பட்டிருக்கும் 'அறநிலைப் பாதுகாப்புக் கழகத்தா’ராவது திருக்கோயில் திருமட உடை மைகளைச் செவ்வனே கணக்கெடுத்துப் பாதுகாத்து, அவை தம்மை மேற்காட்டிய அறங்களுக்குப் பயன்படுத்துகிறார்களோ வென்றால், இல்லை இல்லை யென்றே பலருங் கூறக் கேட்கின்றேம். அதுமட்டுமா! ஏழைக் கோயில்களில் வரும் மிகக்குறைந்த வரும்படியைக் கொண்டு வழிபாடு நடாத்திக் கொண்டு தாமும் வருந்தி உயிர்பிழைக்குங் கோயிற் குருக்கள்மார்களைத் துன்புறுத்தி அவ்வறநிலைப் பாதுகாப்புக் கழகத்தார் அவர்களிடம் வரி வாங்குகின்றன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/336&oldid=1593071" இலிருந்து மீள்விக்கப்பட்டது